\
dhoni - sai sudharsan
dhoni - sai sudharsanweb

“நீ ஏன் என்ன பார்க்க வந்தனு தோனி கேட்டார்..” - சாய் சுதர்சன் பகிர்ந்த விசயம்

சிஎஸ்கேவிற்காக விளையாட வேண்டும் என்ற ஆசை பலமுறை இருந்திருக்கிறது என இளம் வீரர் சாய்சுதர்சன் பேசியுள்ளார்.
Published on
Summary

சாய் சுதர்சன் சமீபத்திய உரையாடலில், பள்ளிக்குச் செல்லும் வழியில் சிஎஸ்கே வீரர்கள் பயணம் செய்த பஸ்ஸை பின்தொடர்ந்த நினைவுகளை கூறி, அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை பலமுறை மனதில் எழுந்ததாக தெரிவித்துள்ளார். தோனி, கோலி, பும்ரா போன்ற நட்சத்திரங்களிடமிருந்து பெற்ற பாராட்டுகள் தன்னுடைய நம்பிக்கையை உயர்த்திய முக்கிய தருணங்களாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரர்கள் வரிசையில் நம்பிக்கை கொடுக்கும் வீரராக வளர்ந்துள்ளார் தமிழகத்தைச்சேர்ந்த சாய்சுதர்சன். இந்தியாவிற்காக டெஸ்ட் கேப்பை பெற்றிருக்கும் சாய் சுதர்சன், 3 வடிவ வீரராக வளரவேண்டும் என்ற வேட்கையுடன் இருந்துவருகிறார்.

sai sudharsan
sai sudharsan

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அவர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்கிற வகையில் சிஎஸ்கே அணியை பார்த்து தான் வளர்ந்தேன் என்றும், பலமுறை சிஎஸ்கேவிற்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் பகிர்ந்துள்ளார்.

dhoni - sai sudharsan
”டிசம்பர் 31.. என்னால அழுகையை நிப்பாட்டவே முடியல..” சாய் சுதர்சனை மாற்றிய அந்த நாள்!

கோபிநாத் உடனான உரையாடலில் பேசியிருக்கும் அவர், “சேப்பாக்கத்தில் மைதானம் நிரம்பிய கிரவ்டுக்கு நடுவில் விளையாடுவது கடினமான விசயமாக இருக்கும். கடந்தமுறை நம்முடைய சொந்த மண்ணில் சிறப்பாக விளையாட முடியவில்லை, இந்தமுறை நிச்சயம் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனக்கு புடிச்ச மைதானம் சேப்பாக்கம், நம்முடைய ஹோம் கிரவுண்ட். சிஎஸ்கேவிற்காக விளையாட வேண்டும் என்ற ஆசை பலமுறை தோன்றியுள்ளது. சின்னவயசுல இருந்து பார்த்துவளர்ந்த டீம் சிஎஸ்கே. என் ஸ்கூல் போறவழியில தான் சிஎஸ்கே வீரர்களோட பஸ் போகும், பலமுறை பஸ் பின்னாடியே போன அனுபவம்லாம் இருக்கு” என கூறினார்.

மேலும் ஜஸ்பிரித் பும்ரா, தோனி, கோலி உடனான சிறந்த தருணங்கள் குறித்து பேசிய அவர், ஒருமுறை தோனியை பார்க்க போயிருந்தன், அப்போ தான் சிஎஸ்கேவுக்கு எதிரா செஞ்சுரி அடிச்சிருந்தன், அவர் என்ன பார்த்ததும், நீ ஏன் என்கிட்ட பேச வந்திருக்க, நீ நல்லாதான விளையாடிட்டு இருக்கன்னு சொன்னாரு. அதேபோல விராட் கோலி இந்த வருசமும் உனக்கு கிரேட் சீசன்னு பாராட்டியிருந்தார். கடந்த சீசன் ஐபிஎல் முடியும்போது நான் அவார்டு நிகழ்ச்சிக்காக நின்னுட்டிருந்தன், அப்போ ஜஸ்பிரித் பும்ரா வந்து என்ன தட்டிகொடுத்து கிரேட் சீசன்னு சொன்னாரு, இதெல்லாம் சிறந்த மொமண்ட்ஸா இருந்திருக்கு என கூறினார்.

dhoni - sai sudharsan
உடைக்கப்பட்ட 149 ஆண்டுகள் சாதனை.. 401 ரன்கள் குவித்து உலகசாதனை படைத்த WI வீரர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com