இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் சிறந்த பந்தை தேர்வுசெய்த சச்சின்
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் சிறந்த பந்தை தேர்வுசெய்த சச்சின்web

சிராஜ், பும்ரா இல்லை.. ’தொடரின் சிறந்த பந்து’ இதுதான்! சச்சின் பாராட்டிய பவுலர்!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பல சிறந்த பந்துகள் வீசப்பட்டன, ஆனால் தொடரின் சிறந்த பந்து என்பதை தேர்வுசெய்திருக்கும் சச்சின் சிராஜ், பும்ரா இருவரையும் ஒதுக்கியுள்ளார்.
Published on

2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பல்வேறு வீரர்கள் ஒவ்வொரு டெஸ்ட்டின் கதாநாயகர்களாக ஜொலித்தார்கள். ஆனால் தொடர் முழுவதும் 25 நாட்கள் பந்துவீசிய ஒரே பவுலராக இருந்த முகமது சிராஜ், தொடரின் இறுதிநாளில் எல்லோருடைய மனதையும் வென்றெடுத்தார்.

குறிப்பாக 5வது டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் ஏற்படுத்திய ஒரு அற்புதம் தொடரையே மீட்டுக்கொடுத்தது.

5வது போட்டியின் 4வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லியை வெளியேற்ற இந்திய கேப்டன் சுப்மன் கில்லும், முகமது சிராஜும் ஒரு திட்டத்தை செயல்படுத்தினர். பவுன்சருக்காக ஃபீல்டிங் செட் செய்யப்பட்டு, ஒரு அற்புதமான யார்க்கரை வீசிய சிராஜ் கிராவ்லியை போல்டாக்கி வெளியேற்றினார்.

4வது நாளின் கடைசி நிமிடத்தில் பந்து வீசப்படுவதற்கு முன்னர் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே சிராஜை தடுத்து நிறுத்தி நேரத்தை வீணடித்தார். அந்த சமயத்தில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டை பல கிரிக்கெட் ரசிகர்களும் ‘பால் ஆஃப் தி சீரிஸ்’ என புகழாரம் சூட்டினர்.

ஆனால் இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர் குறித்து பேசியிருக்கும் சச்சின் டெண்டுல்கர், தொடரின் சிந்த பந்தாக சிராஜ் விக்கெட்டை தேர்வுசெய்ய மறுத்தார்.

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் சிறந்த பந்தை தேர்வுசெய்த சச்சின்
தொப்பியால் வந்த சோதனை! அவுட்டா? நாட் அவுட்டா? என கிளப்பிய விவாதம்! விதிகள் சொல்வது என்ன?

தொடரின் சிறந்த பந்து இதுதான்..

கிறிக் இன்ஃபோ உடன் பேசியிருக்கும் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் தொடர் குறித்த பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஜடேஜா மற்றும் பென் ஸ்டோக்ஸ் கைகுலுக்க மறுத்த சர்ச்சை குறித்து பேசியிருந்த சச்சின், இந்தியா செய்ததுதான் சரி என்றும், இங்கிலாந்து செய்தது தவறு என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொடரின் சிறந்த பந்து எதுவென்று பேசியிருக்கும் சச்சின், சிராஜ் மற்றும் பும்ரா இருவரையும் இந்த விசயத்தில் புறக்கணித்தார். இந்தியா வெற்றிபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டுக்கு எதிராக ஆகாஷ் தீப் போல்டாக்கிய அவுட்ஸ்விங் பந்தை சச்சின் தேர்ந்தெடுத்தார். அதுதான் தொடரின் திருப்பு முனையாக அமைந்தது என்று புகழ்ந்தார்.அ

தொடரின் சிறந்த பந்து குறித்து பேசிய சச்சின், “ஆகாஷ் தீப்பிடமிருந்து ஜோ ரூட்டுக்கு வீசப்பட்ட பந்துதான் தொடரின் பந்தாக நான் தேர்ந்தெடுப்பேன். அது இரண்டாவது டெஸ்டின் திருப்புமுனையாகவும் மாறியது. ஜோ ரூட்டை அவர் வெளியேற்றிய பிறகுதான், அங்கிருந்து விஷயங்கள் இந்தியாவிற்கு சாதகமாக மாறத் தொடங்கின.

ஆடுகளத்தில் லேட் மூவ்மென்ட் இருந்தது, ஃபார்மில் இருக்கும் ஒருவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் குவித்து வைத்திருப்பவரை அப்படி வெளியேற்றுவது எளிதல்ல. எனக்கு அதுதான் தொடரின் சிறந்த பந்து, ஏனெனில் அது ஆட்டத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் நடந்தது” என்று சச்சின் கூறியுள்ளார்.

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் சிறந்த பந்தை தேர்வுசெய்த சச்சின்
”ஜடேஜா செய்ததே சரி.. உங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் வரவில்லை” - ஹேண்ட்ஷேக் சர்ச்சை குறித்து சச்சின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com