ஜடேஜா - ஸ்டோக்ஸ் ஹேண்ட்ஷேக் சர்ச்சை குறித்து சச்சின் கருத்து
ஜடேஜா - ஸ்டோக்ஸ் ஹேண்ட்ஷேக் சர்ச்சை குறித்து சச்சின் கருத்துweb

”ஜடேஜா செய்ததே சரி.. உங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் வரவில்லை” - ஹேண்ட்ஷேக் சர்ச்சை குறித்து சச்சின்!

பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜடேஜா ஹேண்ட்ஷேக் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர்.
Published on

மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் 4 பேரின் உறுதியான பேட்டிங் இல்லையென்றால், ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியானது இங்கிலாந்துக்கு சாதகமாக 3-2 என முடிந்திருக்கும்.

இங்கிலாந்து இந்தியா
இங்கிலாந்து இந்தியா

4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 311 ரன்கள் முன்னிலை பெற்ற பிறகு, போட்டியின் நான்காவது நாளில் முதல் ஓவரிலேயே 0 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அதற்கு பிறகு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்த கேப்டன் கில் மற்றும் ராகுல் இருவரும் 3வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தனர்.

ஆனால் ராகுல் 90 ரன்னிலும், கேப்டன் கில் 103 ரன்னிலும் வெளியேற மீண்டும் இந்திய அணி மீது அழுத்தம் விழுந்தது. ரிஷப் பண்ட்டிற்கும் கால்விரலில் காயம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜடேஜா மற்றும் வாசிங்டன் சுந்தர் இருவரின் தோள்களில் சேர்ந்தது.

பொறுப்பை தனதாக்கிக்கொண்ட இந்த ஆல்ரவுண்டர் ஜோடிகள் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை களத்தில் நின்றனர். கிட்டத்தட்ட 400 பந்துகளை எதிர்கொண்டு களத்தில் நின்ற இந்த ஜோடி, போட்டியை டிராவை நோக்கி அழைத்துச்சென்றது. இருவரும் 80 மற்றும் 89 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இதற்குமேல் விக்கெட்டை வீழ்த்தமுடியாத என நினைத்த பென் ஸ்டோக்ஸ் டிராவிற்காக ஜடேஜாவிடம் கைகுலுக்க சென்றார்.

ஆனால் அதனை ஜடேஜா மறுத்துவிட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் ஜடேஜாவிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஓவர்கள் வீச, இரண்டு வீரர்களும் சதமடித்தபிறகு கைகுலுக்க போட்டி டிராவில் முடிந்தது. பின்னர் 5வது போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரை 2-2 என சமன்செய்து அசத்தியது.

ஜடேஜா கைக்குலுக்க மறுத்ததை பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கேம் ஸ்பிரிட்டை இந்தியா மதிக்கவில்லை, சுய சாதனைகளுக்காக பேட்டிங் செய்தது என விமர்சித்தனர். இந்நிலையில் ஜடேஜா செய்தது சரிதான் என்றும், இங்கிலாந்துக்கு உதவுவததற்காக நாங்கள் அங்கே செல்லவில்லை என்று சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜடேஜா - ஸ்டோக்ஸ் ஹேண்ட்ஷேக் சர்ச்சை குறித்து சச்சின் கருத்து
”5வது நாளிலும் சிராஜ் எப்படி இவ்ளோ ஆற்றலுடன் வீசினார்” - DK-விடம் வியந்து சொன்ன மெக்கல்லம்!

இங்கிலாந்துக்கு உதவுவதற்காக இந்தியா செல்லவில்லை..

பென் ஸ்டோக்ஸ் உடன் ஜடேஜா கைக்குலுக்க மறுத்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர், “கைக்குலுக்காமல் ஜடேஜாவும், வாசிங்டனும் சதமடித்தது கேம் ஸ்பிரிட் இல்லை என்று கூறுகிறார்கள். அது எப்படி கேம் ஸ்பிரிட் இல்லாமல் போகும், அவர்கள் டிராவிற்காக விளையாடினார்கள் சதத்திற்காக விளையாடவில்லை. மாறாக இங்கிலாந்து அணி அவர்களுக்கு எதிராக விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என போராடியது. ஒருவேளை விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி

இருவரும் சதத்திற்காக விளையாடவில்லை, போட்டியை காப்பாற்றவே விளையாடினார்கள், அவர்கள் அதை சரியாக செய்துமுடித்துவிட்டனர். ஹாரி ப்ரூக்கை கொண்டு பந்துவீசுவேன் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியது அவருடைய விருப்பம். அவர்கள் ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய வந்தபோது ஹாரி ப்ரூக் பந்துவீசவில்லை, உங்களுடைய மெய்ன் பவுலர்கள் தான் பந்துவீசினார்கள்.

சச்சின்
சச்சின்ட்விட்டர்

தொடர் அப்போது உயிர்ப்புடன் இருக்கிறது, அந்த சூழலில் உங்களுடைய பவுலர்கள், உங்களுடைய வீரர்கள் சென்று ஓய்வு பெறவேண்டும், அடுத்த போட்டிக்கு தயாராகவேண்டும் என்பதற்காக நாங்கள் கைக்குலுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எப்படி சரி ஆகும். இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா, இல்லை. உங்களுக்கு உதவுவதற்காக இந்தியா அங்கு வரவில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஜடேஜா - ஸ்டோக்ஸ் ஹேண்ட்ஷேக் சர்ச்சை குறித்து சச்சின் கருத்து
The Unsung Hero - சிராஜ்| எத்தனை தோல்விகள், எத்தனை ட்ரோல்கள்.. விழவிழ எழுந்து நின்ற வீரனின் கதை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com