\
matt renshaw
matt renshawcricket australia / x

SAvsAUS| பேட்டிங் மட்டுமல்ல.. பந்துவீச்சிலும் வில்லனான ரென்ஷா! தோல்வியின் பக்கம் தென்னாப்ரிக்கா!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் தருவாயில் ஆஸ்திரேலியா அணி நீடிக்கிறது.
Published on: 
Summary

ஆஸ்திரேலியாவின் மேட் ரென்ஷா, பேட்டிங்கில் சதமடித்து அணியை 390 ரன்களுக்கு எடுத்துச்சென்றதுடன், பந்துவீச்சிலும் வில்லனாகி தென்னாப்பிரிக்காவின் கேப்டன் பவுமாவை அவுட்டாக்கினார். 421 ரன்கள் இலக்குடன் விளையாடும் தென்னாப்பிரிக்கா 102 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆஸ்திரேலியா வெற்றிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Matt Renshaw
Matt Renshawcricbuzz

பரபரப்பாக நடைபெற்றுவரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 125 ரன்னுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அங்கிருந்து தனியாளாக போராடி 190 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா வீரர் மேட் ரென்ஷா அணியை 390 ரன்களுக்கு எடுத்துவந்தார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 314 ரன்கள் அடித்து டிக்ளார் செய்தது.

இந்தநிலையில் 421 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா அணி 4ஆம் நாள் ஆட்டமுடிவில் 102 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கையாக எய்டன் மார்க்ரம் 45 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். பேட்டிங்கில் சதமடித்த மேட் ரென்ஷா 4வது இன்னிங்ஸில் பந்துவீச்சிலும் கேப்டன் டெம்பா பவுமாவை அவுட்டாக்கி அசத்தினார். இது மேட் ரென்ஷாவின் முதல் டெஸ்ட் விக்கெட்டாகும். ஆஸ்திரேலியா அணியில் மற்ற ஸ்டார் வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையில், இந்த தொடரில் மேட் ரென்ஷா ஸ்டெப்அப் செய்துள்ளது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.

matt renshaw
9 ஆண்டுக்கு பின் சதம்.. ஆஸ்திரேலியாவை மீட்டெடுத்த மேட் ரென்ஷா! SA-வுக்கு பதிலடி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com