ரிஷப் சம்பவம் மறந்திடுச்சா! மணிக்கு 200 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய ரோஹித் சர்மாவிற்கு அபராதம்!

மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் அதிவேகத்தில் கார் ஓட்டிய புகாரில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மாpt web

இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெறுகிறது. இதில் விளையாடும் இந்திய அணியுடன் இணைந்து கொள்ள ரோகித் சர்மா தனது லம்போர்கினி காரில் வந்துள்ளார். மும்பை - புனே எக்ஸ்பிரஸ்வேயில் அவர் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததாகவும் இதனால் ரோகித் சர்மாவின் கார் தடுத்து நிறுத்தப்பட்டு 3 முறை அபராத ரசீதுகள் தரப்பட்டதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rohit Sharma
Rohit SharmaTwitter

வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கான பயிற்சிக்கு முன் ஒரு நாள் ஓய்வு கிடைத்த நிலையில் அதை தனது குடும்பத்தினருடன் செலவிட ரோகித் சர்மா மும்பை சென்றிருக்கலாம் என்றும் அங்கிருந்து அவர் அதிவேகமாக திரும்பி வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ரிஷப் உயிர் தப்பினாலும் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது. அவர் சில ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த, அவர் தற்போது காயங்களில் இருந்து மீண்டு வருகிறார். தற்போது உடற்பயிற்சிகளை செய்வது போன்ற காணொளிகளையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Rishabh Pant
Rishabh Pantpt web

இந்நிலையில் இது குறித்தான செய்திகள் வெளியான நிலையில் ரசிகர்கள் இரு சம்பவங்களையும் குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com