”டிராவிட் ஒரு பெரிய தருணத்தில் இருக்கவேண்டும் ;அவருக்காக கோப்பையை வெல்ல நினைக்கிறோம்” - ரோகித் சர்மா

இந்த ஒரு நாளுக்காகத் தான் காத்திருந்தோம். வீரர்களின் ரோல் என்ன என்பதில் எனக்கும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இடையே நல்ல உரையாடல் இருந்தது - இந்திய கேப்டன் ரோகித் சர்மா
ராகுல் டிராவிட் - ரோகித் சர்மா
ராகுல் டிராவிட் - ரோகித் சர்மாPT

அனைத்து வீரர்களும் அடித்து ஆட வேண்டிய அவசியமில்லை! - ரோகித் சர்மா

2003-ல் அடைந்த ஒரு இதயம் உடைக்கும் தோல்விக்கு பிறகு 2011-ஆம் ஆண்டு கோப்பை வென்று தூக்கியது தோனி தலைமையிலான இந்திய அணி. அதற்கு பிறகு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் வலுவான அணியாக உலகக்கோப்பைக்கு சென்றாலும், அரையிறுதி போட்டிவரை சென்ற இந்திய அணி 2015 மற்றும் 2019 உலகக்கோப்பைத் தொடரில் படுதோல்வியை சந்தித்து திரும்பியது. அதற்கு பிறகு கேப்டன்சி பொறுப்பை ஏற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதிவரை எட்டியது. ரோகித் தலைமையிலாவது கோப்பை வெல்லும் நினைத்தபோது இங்கிலாந்து அணியோடு 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு படுதோல்வியோடு திரும்பியது இந்தியா.

2007 india loss
2007 india loss

இந்நிலையில்தான் இந்திய அணியின் மீது பொதுவாக எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. எப்படியும் இந்த இந்திய அணியும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதிவரை சென்று திரும்பிவிடும் என்றே தோன்றியது. காரணம் காயத்தால் ஓய்விலிருந்த வீரர்கள் எப்படி நன்றாக செயல்பட போகிறார்கள் என்ற கேள்வி பெரிதாக இருந்தது.

ஆனால் ஓய்வில் இருந்தபோது சும்மா உட்கார்ந்து இல்லை; தங்கள் நாட்டிற்காக தயாராகிதான் வந்திருக்கிறோம் என பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் நிரூபித்து இந்திய அணியை இறுதிப்போட்டிவரை எடுத்துச்சென்றுள்ளனர். அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பதிலடி கொடுத்த இந்திய அணி 90% சதவீதம் கிணற்றை தாண்டிவிட்டது. மீதமிருக்கும் ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டால் 12 வருட போராட்டத்தின் பலனாய் 3-வது முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்தும் இந்திய அணி.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டி குறித்து பேசியுள்ளார்.

அனைத்து வீரர்களுக்கும் ரோல் ஒதுக்கப்பட்டுள்ளது! - ரோகித் சர்மா

இந்திய அணியின் தயாரிப்பு குறித்து பேசியிருக்கும் கேப்டன் ரோகித் சர்மா, “ 2011 எனக்கு அதிக உணர்ச்சிகரமான ஒன்றாகவும், அதேபோல் அணியில் இடம்பெறாததால் கடினமான ஒன்றாகவும் அமைந்தது. ஆனால் தற்போது இருக்கும் நிலை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு போதும் நான் இந்திய அணியை இறுதிப்போட்டியில் வழிநடத்துவேன் என நினைத்ததில்லை. நான் தொடர்ந்து அணிக்குள் நல்ல சூழலை உருவாக்க விரும்பினேன். அது தற்போது நடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

Rahul Dravid - Rohit Sharma
Rahul Dravid - Rohit Sharma

சுமார் 2 வருடத்திற்கு முன்பிலிருந்தே நாங்கள் 2023 உலகக்கோப்பைக்காக தயாராகி வருகிறோம். இந்த வடிவத்தில் எந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை கண்காணித்து அவர்களுக்கான பாத்திரத்தை வகுத்துள்ளோம். இருக்கும் 7 பேட்டர்களும் அடித்து ஆடவேண்டியதில்லை, அனைவருக்கும் அவரவருக்கான ரோல் என்ன என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கும், பயிற்சியாளருக்கும் நிறைய நல்ல உரையாடல் இருந்தன.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

"இந்திய அணியின் இந்த வளர்ச்சியில் ராகுல் டிராவிட்டின் பங்கு மிகப்பெரியது. 2022 டி20 உலகக்கோப்பை தோல்வியின்போது எந்த வீரரின் மீதும் தோல்வியின் தாக்கம் பாதிக்காதவாரு அவர் பார்த்துக்கொண்டார்.

வீரர்களின் திறமையில் நம்பிக்கை வைத்து மீண்டும் ஒரு அணியாக உருவாக்கியதில் அவர் பங்கு அலப்பறியது. அவர் இதுபோன்ற ஒரு பெரிய நிகழ்வில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார், அவருக்காக நாங்கள் இந்த கோப்பையை வெல்ல நினைக்கிறோம் “ என ரோகித் பேசியுள்ளார்.

Shami
Shami

மேலும், “ஷமி முதல் பாதியில் விளையாட முடியாமல் போனது கடினமான ஒன்றுதான். இருப்பினும் அவர் சிராஜ் மற்றும் பும்ராவிற்கு உதவுவதில் பெரிய பங்கு வகித்தார். அதுதான் அவருடைய தரத்தை காட்டுகிறது. நாங்கள் அவரிடம் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தோம், அவருக்கான வாய்ப்பு வந்தபோது அவர் அதை பிரகாசப்படுத்தினார். ஆஸ்திரேலியா அணி கடைசி 8 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. அவர்கள் எப்படியான ஒரு வலுவான பக்கம் என்று எங்களுக்கு தெரியும்” என ரோகித் மேலும் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com