ரோகித் சர்மா
ரோகித் சர்மாweb

சேவாக், சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் ரோகித்.. இந்திய தொடக்க வீரராக சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தார் ரோகித் சர்மா..
Published on
Summary

ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக 15787* ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். சேவாக், சச்சினை பின்னுக்கு தள்ளிய ரோகித், ஆஸ்திரேலியாவில் அதிக ODI சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், சூர்யகுமார் யாதவ் தலைமையில் 5 டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது.

பெர்த் மற்றும் அடிலெய்டு மைதானங்களில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வென்ற ஆஸ்திரேலியா, இந்திய அணியை எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

இந்தசூழலில் 3வது ஒருநாள் போட்டியில் அபாரமான சதமடித்து 121* ரன்கள் குவித்த ரோகித் சர்மா, அவர்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எல்லாம் சதமடித்து பதிலடி கொடுத்தார்..

ரோகித் சர்மா
கவலை தரும் இந்தியாவின் பந்துவீச்சு.. உலகக்கோப்பைக்குள் சரிசெய்ய வேண்டிய 3 விசயங்கள்!

ரோகித் படைத்த வரலாற்று சாதனை..

தன்னுடைய 50வது சர்வதேச சதத்தை பதிவுசெய்த ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ODI சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். 6 சதங்களுடன் ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் சங்கக்கராவை பின்னுக்கு தள்ளினார். தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக சதங்கள் அடித்த சச்சினை, 9 சதங்களுடன் சமன்செய்து அசத்தியுள்ளார்..

இந்தசூழலில் மற்றொரு சாதனைக்கும் அவர் சொந்தக்காரராக மாறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக 15758 ரன்கள் குவித்து முதலிடத்திலிருந்த விரேந்தர் சேவாக்கை பின்னுக்குதள்ளியுள்ளார் ரோகித் சர்மா.. முதலிரண்டு இடங்களில் இருந்த சேவாக் மற்றும் சச்சினை பின்னுக்கு தள்ளியுள்ள ஹிட்மேன் 15787* ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்..

ரோகித் சர்மா
டாப் 5 ODI இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள்| அகர்கருக்கு இடம், ஜகீர் கானுக்கு இடமில்லை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com