ரிங்கு சிங் 48 பந்தில் 108 ரன்கள் அடித்தார்
ரிங்கு சிங் 48 பந்தில் 108 ரன்கள் அடித்தார்x

மைதானம் முழுவதும் பறந்த சிக்சர்கள்.. 48 பந்தில் 108 ரன்கள் விளாசிய ரிங்கு சிங்!

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் ரிங்கு சிங், தொடருக்கு முன்னதாக டி20 லீக் போட்டி ஒன்றில் அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.
Published on
Summary
  • ஆசியக்கோப்பைக்கு முன்னதாக ரிங்கு சிங் மிரட்டல் ஆட்டம்

  • 48 பந்தில் 108 ரன்கள் விளாசிய ரிங்கு சிங்

  • உத்தரபிரதேச டி20 லீக் போட்டியில் சதம் விளாசிய ரிங்கு சிங்

2025 ஆசியக்கோப்பை தொடரானது டி20 வடிவத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை நடைபெறவிருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்ஹாங், ஓமன் முதலிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் முதலிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் முதலிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

Rinku Singh
Rinku Singh

இந்நிலையில், ஆசியக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேஎல் ராகுல், ரியான் பராக் போன்ற வீரர்களுக்கு பதிலாக ரிங்கு சிங்கின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்

ரிங்கு சிங் 48 பந்தில் 108 ரன்கள் அடித்தார்
’ஆஸ்திரேலியாவிற்கு வந்த சோதனை..’ வரிசையாக 4 முறை 200 ரன்னுக்குள் AllOut! சம்பவம் செய்த தெ.ஆப்ரிக்கா!

48 பந்தில் 108 ரன்கள் விளாசிய ரிங்கு..

நேற்று ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த UPT20 லீக் போட்டியில் மீருட் மேவரிக்ஸ் அணிக்காக களமிறங்கிய ரிங்கு சிங், 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 அபார சிக்சர்களை விளாசி 225 ஸ்டிரைக் ரேட்டில் 108 ரன்கள் அடித்து அசத்தினார். அவரது அற்புதமான ஆட்டம் 38/4 என்ற நிலையிலிருந்து மேவரிக்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தது.

முதலில் பேட்டிங் செய்த கோரக்பூர் லயன்ஸ் அணி 167 ரன்களை சேர்த்தது. பின்னர் 168 ரன்களைத் துரத்திய மேவரிக்ஸ் அணி எட்டாவது ஓவரில் 38/4 என்ற நிலையில் தடுமாறியது. அப்போது பேட்டிங் செய்ய களமிறங்கிய ரிங்கு சிங், கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்ற நிலையிலிருந்து போட்டியை லயன்ஸ் அணியின் கைகளிலிருந்து தட்டிப்பறித்தார், ஐந்தாவது விக்கெட்டுக்கு சஹாப் யுவராஜ் (22) உடன் 65 பந்துகளில் 130 ரன்கள் சேர்த்து, ஏழு பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றியை உறுதி செய்தார். கடைசி 14 பந்தில் 51 ரன்களை விளாசினர் ரிங்கு,.

ஆசியக்கோப்பைக்கு முன்னதாக வெளிப்பட்டிருக்கும் இந்த ஃபார்ம், அவருக்கு அணியில் இடத்தை பெற்றுத்தரும் என்ற சூழலை உருவாக்கியுள்ளது.

ரிங்கு சிங் 48 பந்தில் 108 ரன்கள் அடித்தார்
“கேப்டனாக்க வேண்டாம்.. அணியிலாவது எடுங்கள்” - ஸ்ரேயாஸ் தந்தை வேதனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com