RCB vs MI | WPL 2024 | மகளிர் பிரீமியர் லீக் தொடர் - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் - RCB
மகளிர் பிரீமியர் லீக் தொடர் - RCBTwitter

மகளிர் பிரீமியர் லீக் தொடரில், இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான எலிமினேட்டர் சுற்றில் 2-வது, 3-வது இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் அதிகப்பட்சமாக எல்லிஸ் பெர்ரி 66 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது.

மகளிர் பிரீமியர் லீக் தொடர் - RCB
ஐபிஎல் 2024: சி.எஸ்.கே. அணியிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்.. காரணம் என்ன?

கடைசி பந்தில் மும்பை வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இறுதியில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 130 மட்டுமே எடுத்தது.

இதனால் மும்பை இந்தியன்ஸை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com