ஐபிஎல் 2024: சி.எஸ்.கே. அணியிலிருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்.. காரணம் என்ன?

2024-ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்ட்விட்டர்

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ். இவர், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஏலத்தின்போது, அவ்வணி சார்பில் 16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

MS Dhoni
MS DhoniPTI

கடந்த தொடரில் காயம் காரணமாக 2 போட்டிகளில் மட்டுமே சென்னை அணிக்காக விளையாடினார். இந்த நிலையில், ஜனவரி 24 முதல் மார்ச் 11 வரை இங்கிலாந்து அணி இந்தியாவுடன் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக சிஎஸ்கே கூறியுள்ளது.

இதையும் படிக்க: ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே’-உலகிற்கு ஊக்கத்தை தந்த ஊன்றுகோல்; உவமைக் கவிஞர் சுரதா பிறந்தநாள்

ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வோர் அணியும் விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்file image

வீரர்களின் பட்டியலை நவம்பர் 26-ம் தேதி அதற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்தே, 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கமாட்டார் என சிஎஸ்கே அணி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: இலவசத்துக்கு எதிராக பேசும் பாஜக, தேர்தலில் ஏன் இலவசங்களை அள்ளிவீசுகிறது? இரட்டை வேடம் போடுகிறதா?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com