kuldip yadav - richard gleeson
kuldip yadav - richard gleesonweb

முன்னாள் சிஎஸ்கே பவுலரை ஒப்பந்தம் செய்த RCB.. முன்னாள் RR பவுலரை இணைத்த CSK!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.
Published on
Summary

19வது ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கலீல் அகமது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நுவான் துஷாரா விலகிய நிலையில், அவர்களுக்கு மாற்றாக புதிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

19வது ஐபிஎல் சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. பல அணிகளில் பல வீரர்கள் காயத்தால் தொடரிலிருந்து வெளியேறியிருக்கும் சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலீல் அகமதுவும், ஆர்சிபி அணியிலிருந்து நுவான் துஷாராவும் விலகியுள்ளனர்.

இந்தசூழலில் அவர்கள் இருவருக்குமான மாற்று வீரர்களை அவ்வணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்தவகையில் சிஎஸ்கே அணி கலீல் அகமதுவுக்கு மாற்றாக முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் குல்திப் யாதவை சேர்த்துள்ளது.

அதேபோல ஆர்சிபி அணியானது துஷாராவுக்கு மாற்றாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிசர்ட் க்லீசன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 2024ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தன்னுடைய ஐபிஎல் கரியரை தொடங்கினார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சிறப்பாக செயல்பட்டுவரும் இவரை ஆர்சிபி அணி மீதமிருக்கும் போட்டிகளுக்காக இணைத்துள்ளது.

kuldip yadav - richard gleeson
ஐபிஎல் 2026 | வெளியேறும் PBKS.. உள்ளே போகும் CSK.. 8 அணிகளுக்கான Playoff வாய்ப்புகள்..?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com