ஆர்சிபி 2வது முறையாக கோப்பை வென்றது
ஆர்சிபி 2வது முறையாக கோப்பை வென்றதுweb

'இது மந்தனாவின் RCB..' 2வது கோப்பை வென்று சாதனை.. தொடர்ந்து 4 ஃபைனலில் டெல்லி தோல்வி!

2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது ஆர்சிபி அணி.
Published on
Summary

2026 மகளிர் பிரீமியர் லீக் இறுதியில், ஆர்சிபி 204 ரன்கள் இலக்கை எளிதில் அடைந்து, டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தியது. ஜார்ஜியா வால் மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ஆர்சிபிக்கு இரண்டாவது கோப்பை வென்றனர். டெல்லி தொடர்ந்து 4வது முறையாக இறுதியில் தோல்வியடைந்தது.

போட்டிக்களம் என வந்துவிட்டால் 'குருவா? சிஷ்யனா? நண்பர்களா?' என்பதெல்லாம் கிரிக்கெட்டிற்கு தெரியாது.. ஜெயிக்கணும், தன்னுடைய அணிக்காக கோப்பையை உயர்த்தணும் என்பது மட்டுமே ஒவ்வொரு உண்மையான கிரிக்கெட் வீரனுக்கும் வேட்கையாகவே இருக்கும்..

அந்தவகையில் 2026 மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியானது இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த தோழிகளாக இருந்துவரும் ஜெமிமா மற்றும் ஸ்மிருதி மந்தனா இடையே நிகழப்போகும் கோப்பைக்கான போராக மாறியது.

ஸ்மிருதி மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஸ்மிருதி மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ்web

ஒருபக்கம் தொடர்ந்து 3 முறை இறுதிப்போட்டிக்கு சென்று தோல்வியடைந்த ஜெமிமா தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் நிற்கிறது.. மறுபக்கம் ஒவ்வொரு முறையும் கோப்பைக்காக அவமானப்படுத்தப்பட்ட ரசிகர்களின் கோட்டையாக இருக்கும் ஆர்சிபி 2வது கோப்பைக்காக ஸ்மிருதி மந்தனா தலைமையில் காத்திருக்கிறது..

டெல்லிக்கு முதல் கோப்பையா? ஆர்சிபிக்கு இரண்டாவது கோப்பையா? என்ற எதிர்ப்பார்ப்புக்கு இடையே 2026 மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

ஆர்சிபி 2வது முறையாக கோப்பை வென்றது
WPL FINAL| ஆர்சிபிக்கு மரண அடி கொடுத்த டெல்லி.. 204 ரன்கள் இலக்கு!

மீண்டும் சாம்பியன் ஆனது ஆர்சிபி..

வதோதரா மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷஃபாலி மற்றும் லிசெல் லீ இருவரும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

6 ஓவரில் 51 ரன்கள் விரட்டிய இந்த ஜோடி பெரிய இலக்கிற்கு அடித்தளம் போட, அடுத்துவந்த கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 பவுண்டரிகளை விரட்டி 32 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். கடைசியாக வந்து நாலாபுறமும் சிக்சர் பவுண்டரிகளக விரட்டிய சின்னெல்லே ஹென்றி 15 பந்தில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 35 ரன்கள் விளாசினார். ஜெமிமா 57 ரன்கள், லாரா 44 ரன்கள், லிசெல் லீ 37 ரன்கள், ஹென்றி 35 ரன்கள், ஷஃபாலி 20 ரன்கள் என அடிக்க 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது டெல்லி அணி.

204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணி 9 ரன்னிற்கே கிரேஸ் ஹாரிஸ் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜார்ஜியா வால் மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் 2வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டினர்.

ஜார்ஜியா வால் 79 ரன்களும், மந்தனா 87 ரன்களும் அடித்து அசத்த கடைசி ஓவரில் 6 பந்துக்கு 10 ரன்கள் தேவையாக மாறியது. வெற்றி எந்தபக்கமும் போகலாம் என இருந்தபோது அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டிய ராதா யாதவ் அணியை இரண்டாவது கோப்பைக்கு அழைத்துச்சென்றார். WPL வரலாற்றில் அதிகபட்ச டோட்டலை சேஸ்செய்து வரலாறு படைத்தது ஆர்சிபி.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

தொடர்ந்து 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4வது முறையும் தோல்வியை சந்தித்து சோகமுகத்துடன் திரும்பியது. இரண்டாவது முறையாக கோப்பை வென்ற ஆர்சிபி, மும்பை அணியுடன் அதிக கோப்பைகள் வென்ற அணியாக கைக்கோர்க்கிறது..

ஆர்சிபி 2வது முறையாக கோப்பை வென்றது
டெல்லியா OR ஆர்சிபியா..? இரண்டு தோழிகளுக்கு இடையே நிகழும் போர்.. கோப்பை யாருக்கு? பலம்-பலவீனம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com