"மீசை வச்சவன் ரவி(இந்திரன்)- மீசை வைக்காதவன் ரவி(சந்திரன்)"..அஸ்வினை ரஜினி ஸ்டைலில் வாழ்த்திய ஜடேஜா!

100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் அஸ்வினுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அஸ்வின் - ஜடேஜா
அஸ்வின் - ஜடேஜாweb

இந்தியாவின் சுழல் மன்னனான தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 100வது டெஸ்ட் போட்டி என்ற பெரிய மைல்கல்லை எட்டினார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின், அதிகமுறை 5 விக்கெட்டுகள் மற்றும் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து முதல் இந்திய வீரராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனைகளை இந்திய கிரிக்கெட்டுக்காக புரிந்ததற்காக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் அஸ்வினுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 500 தங்க நாணயங்கள் பதித்த சிறப்பு நினைவு பரிசும், செங்கோலும், ஒரு கோடி ரூபாய் காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, முன்னாள் பிசிசிஐ தலைவர் என் சீனிவாசன், முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முதலிய ஜாம்பவான்கள் கலந்துகொண்டு அஸ்வினை பாராட்டி பேசினர்.

jadeja - ashwin
jadeja - ashwin

அப்போது தான் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஸ்வினின் பவுலிங் பார்ட்னரான ரவிந்திர ஜடேஜா அஸ்வினை பாராட்டி வீடியோவில் பேசியிருந்தார். ஜடேஜா கலகலப்பாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஸ்வின் - ஜடேஜா
கோப்பைக்கான 16 வருட போராட்டம்.. கோலி முதலிய 7 RCB கேப்டன்களால் சூட முடியாத மகுடம்! சூடுவாரா மந்தனா?

மீசை வச்சவன் ரவி(இந்திரன்) ஜடேஜா - மீசை வைக்காதவன் ரவி(சந்திரன்) அஸ்வின்!

100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வினை பாராட்டிய பவுலிங் பார்ட்னரான ரவிந்திர ஜடேஜா, “வணக்கம் அஸ்வின் அண்ணா. 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகள் வீழ்த்திய உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக நீங்கள் அளித்திருக்கும் பங்கானது அபாரமானதாகும். தொடர்ந்து நிறைய விக்கெட்டுகள் எடுத்து உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களை போல ஜாம்பவான் வீரராக மாறமுடியும்” என்று பாராட்டி பேசினார்.

தொடர்ந்து கலகலப்பாக பேசிய ஜடேஜா அஸ்வினுடன் நான் டிரெஸ்ஸிங் அறையை மட்டும் பகிர்ந்துகொள்ளவில்லை, நாங்கள் பெயரையும் பகிர்ந்துகொண்டுள்ளோம் என்று கூறி, “நான் ரவி(இந்திரன்) நீங்கள் ரவி(சந்திரன்), மீசை வச்சவன் ரவிஇந்திரன் - மீசை வைக்காதவன் ரவிசந்திரன். நல்லா இருக்கு அஸ், ரொம்ப நல்லா இருக்கு” என்று கலகலப்பாக பேசினார். ரஜினி தில்லுமுல்லு டயலாக்கை போன்று ஜடேஜா பேசிய இந்த காணொளியை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.1

அஸ்வின் - ஜடேஜா
“தோனி எனக்கு செய்த செயலுக்காக என் வாழ்நாள்..” அஸ்வினுக்கு 1 கோடி பரிசு! பாராட்டிய முன்.வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com