\
Ravichandran Ashwin Says on Virat Kohli and Rohit Sharma Playing Form
virat kohli - rohit sharmaஎக்ஸ் தளம்

”அவர்களை யாராலும் தொட முடியாது..” ரோகித், கோலியின் ஆட்டம் குறித்து வியந்து பேசிய Ex வீரர்!

இங்கிலாந்து ஒருநாள் தொடரில், வியக்கத்தக்க வகையில் ஆடிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆட்டத்தைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
Published on

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்காக, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார், இந்திய அணியின் ஹிட் மேன் ஆன ரோகித் சர்மா. சமீபத்தில்கூட இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய நிலையில், மூன்றாவது சதமடித்து சாதனை படைத்தார். மேலும், அவரது ஓய்வு குறித்து விமர்சித்தவர்களுக்கும் தன்னுடைய ஆட்டத்தாலேயே பதிலடி கொடுத்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே ரோகித்தின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இதே தொடரில் முதல் போட்டியில் சொதப்பிய விராட் கோலி, அடுத்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து மிரட்டினார்.

rohit, virat
rohit, viratx page

இந்த நிலையில்தான், அவர்களது ஆட்டம் குறித்து பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

Ravichandran Ashwin Says on Virat Kohli and Rohit Sharma Playing Form
‘வயசானாலும் உங்க ஆட்டம் போகல..’ Eng. மண்ணில் மிரட்டிய விராட், ரோகித்.. இனிமேல் ஆடுவது எப்போது?

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “ரோகித் சர்மா, விராட் கோலி விளையாட விரும்பினால், அவர்களது இடத்தை யாராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அதற்கு முதல் காரணம், அவர்களின் அசாத்தியமான ரன் குவிப்பு. ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 12,000 ரன்களைக் குவித்துள்ளார். இத்தகைய இமாலய சாதனைகளைப் படைத்த ஒரு வீரரை யாராலும் அணியில் இருந்து நீக்க முடியாது. இரண்டாவது காரணம், அவர்கள் பேட்ஸ்மேன்கள்.

அஸ்வின்
அஸ்வின்எக்ஸ் தளம்

அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மைதானத்திற்கு ரசிகர்கள் அவர்களைப் பார்க்கவே வருகிறார்கள். அவர்களை நீக்கினால் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துவார்கள். பந்துவீச்சாளர்களுக்காகவும் ரசிகர்கள் இதேபோல் கொந்தளிக்கும் ஒருநாள் வந்தால், அவர்களையும் அணியில் இருந்து நீக்குவது கடினமாகிவிடும்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அழுத்தம் காரணமாகவே ஓய்வு பெற்றார்கள் என்ற சர்ச்சை எழுந்தது.

Ravichandran Ashwin Says on Virat Kohli and Rohit Sharma Playing Form
“சதமடிச்சது ரோகித்துதான்; ஆனா..” - ‘படையப்பா’ வசனத்துடன் கெத்து காட்டிய ஷர்துல் தாக்கூர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com