“மிகவும் சந்தோஷமாக இருக்கிறது; ஆனால்... எப்படி உணர்கிறேன் சொல்ல முடியவில்லை” - அஸ்வின்

“ஒரு சில ஸ்பெல்களில், உங்களின் லென்த், லைன் எல்லாம் சரியாகவே அமையும். இருந்தாலும், அதனால் உங்களால் விக்கெட்டுகள் எடுத்துவிட முடியாது” என்று அஸ்வின் கூறியுள்ளார்.
ravichandran ashwin
ravichandran ashwintwitter

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என வென்றிருக்கிறது இந்திய அணி. இந்தத் தொடரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தி டாப் விக்கெட் டேக்கராக விளங்கினார் தமிழக வீரர் அஸ்வின். 500 டெஸ்ட் விக்கெட்கள், அதிக 5 விக்கெட் ஹால்கள், இந்தியாவில் அதிக விக்கெட்டுகள் என பல்வேறு மைல்கற்களைக் கடந்த அஸ்வின், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆடியபோது 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய 14வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

ravichandran ashwin
முத்தையா முரளிதரனின் உலக சாதனையை தகர்த்த அஸ்வின்! 100வது டெஸ்ட் போட்டியில் 3 இமாலய சாதனைகள்!
Ravichandran Ashwin
Ravichandran AshwinX

ஐந்தாவது டெஸ்ட் முடிந்த பிறகு இத்தொடரின் வெற்றி பற்றி பேசிய அஸ்வின்...

‘சொல்ல வார்த்தைகளில்லை...’

"மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் நான் எப்படி உணர்கிறேன் என்று சரியாக சொல்ல முடியவில்லை. கடந்த சில வாரங்களாக நிறைய விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. என்னுடைய 100வது போட்டி பற்றியும் நிறைய பேசப்பட்டிருக்கிறது. பலரும் என்னை வாழ்த்தியது நிறைவாக இருந்தது. பிசிசிஐ மீடியா டீமும் சில அற்புதமான விஷயங்களை வெளியிட்டன. ஆனால் அதையெல்லாம் விட, விக்கெட்டுகள் நிறைந்த ஒரு ஆட்டத்தை விட ஒரு பௌலராக வேறு எதை எதிர்பார்த்திட முடியும்?" என்று கூறினார்.

‘5 விக்கெட் ஹால் எடுத்தது...’

தன்னுடைய 100வது போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்தது பற்றி கேட்டதற்கு, "இந்தத் தொடர் முழுவதும் நான் நிறைய விஷயங்களை பரிசோதித்துப் பார்த்தேன். பல்வேறு ஆக்‌ஷன்கள், வேறு வேறு வேகங்கள், வித்தியாசமான ரிலீஸ்கள் என பலதும் முயற்சி செய்தேன். காரணம், இந்திய போன்ற ஒரு இடத்தில் ஒவ்வொரு மைதானத்தில் சூழ்நிலை ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். இருந்தாலும், இந்தப் போட்டியில் நான் பந்துவீசிய விதம் எனக்கு திருப்திகரமாக இருக்கிறது. அதிலும் ஒருசில ஷாட்கள் என் பந்துவீச்சில் போயிருந்தாலும் எனக்கு ஆட்டம் போன விதம் சந்தோஷமாகவே இருக்கிறது. காரணம், சூழ்நிலை எந்தப் பக்கம் வேண்டுமானால் திரும்பியிருக்கலாம். ஆனால், அதைவிட ராஞ்சி டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் நான் பந்துவீசியதே சிறந்த ஸ்பெல் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

ashwin
ashwinpt desk

‘தொடரும் விமர்சனங்கள்...’

தான் தொடர்ந்து வேரியேஷன்களைப் பயன்படுத்துவது பற்றியும், அதனால் சந்திக்கும் விமர்சனங்களைப் பற்றியும் பேசிய அஸ்வின், "மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை. கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சரி, வேறு எந்தத் துறையிலும் நீங்கள் ஒரு முன்னணி ஆளாக இருந்தாலும் சரி, வல்லுநர்களிடமிருந்து நீங்கள் விமர்சனங்களை சந்தித்தே ஆகவேண்டும்.

இதுவும் அப்படித்தான். நான் எப்போதும் சுற்றி நடப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். நல்ல விமர்சனங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் நான் எப்போதும் செவி சாய்ப்பேன். ஆனால், நான் புதிதாக முயற்சி செய்யாத பட்சத்தில் என்னால் எப்படி கற்றுக்கொள்ள முடியும். அதனால் நான் கற்றுக் கொண்டதை எனக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் பயன்படுத்துவேன். அதை ஏன் நான் அடக்கிக்கொள்ள வேண்டும்?

‘என்னுடைய முயற்சிகள் நல்லபடியாக பலன் கொடுத்திருக்கின்றன’

காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்போது எத்தனையோ வீடியோக்கள், வீடியோ அனாலிசிஸ்கள் நிறையவே கிடைக்கின்றன. டாப் டெஸ்ட் அணிகள் அதிகம் விளையாடுகின்றன. அதனால் பேட்ஸ்மேன்கள் அனைத்துக்கும் தயாராக இருப்பார்கள். நீங்கள் அதே ஆளாக தொடர்ந்து அவர்கள் முன் நின்றால், மிகவும் எளிதாக உங்களை சமாளித்துவிடுவார்கள்.

ஒருசில தருணங்களில், ஒரு சில ஸ்பெல்களில், உங்களின் லென்த், லைன் எல்லாம் சரியாகவே அமையும். இருந்தாலும், அதனால் உங்களால் விக்கெட்டுகள் எடுத்துவிட முடியாது. அது வேலைக்கே ஆகாது என்று நான் சொல்லிடவில்லை. அதிர்ஷ்டவசமாக என்னுடைய முயற்சிகள் நல்லபடியாக பலன் கொடுத்திருக்கின்றன.

ashwin - kumble
ashwin - kumbleCricinfo

இப்படித்தான் அனைவரும் செய்யவேண்டும் என்று நான் எதுவும் சொல்லிடவில்லை. ஆனால், தற்போது இருக்கும் தொழில்நுட்பம், வீடியோக்கள் போன்றவற்றையெல்லாம் கருதும்போது நீங்கள் எப்போதும் தயாராக இருப்பது நல்லதுதான்" என்று கூறினார்.

‘குல்தீப்புடன் பந்துவீசிய அனுபவம்...’

இந்தத் தொடரில் அசத்திய இன்னொரு ஸ்பின்னர் குல்தீப் யாதவுடன் சேர்ந்து பந்துவீசிய அனுபவம் பற்றிப் பேசிய அஸ்வின், "ஆடுகளத்தின் ஒரு End-ல் பந்து நன்றாக நின்று வந்தது. இன்னொரு End-ல் இருந்து பந்து வேகமாக விரைந்தது. உங்கள் திறனை வெளிப்படுத்தி அதை சரியாகப் பயன்படுத்தினால் அது சரியாகக் கைகொடுக்கும். புதிய பந்தில் எனக்கு நன்றாக பௌன்ஸ் கிடைத்தது. அதை சிறப்பாகப் பயன்படுத்த முடிந்தது.

முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் அந்தப் பக்கம் இருந்து பந்துவீசும்போது அதை அவரால் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அவர் பந்துவீசிய விதத்தை என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் அப்படி பந்துவீசிய விதத்தைப் பார்ப்பதே அவ்வளவு அற்புதமாக இருந்தது. அவருக்கு கடந்த சில மாதங்கள் போன விதத்தைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார் அஸ்வின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com