“கடந்தகால சாதனைகள் பறைசாற்றுகின்றன.. வெற்றி பெறுவீர்கள்” - இஷான், ஸ்ரேயாஸ்க்கு ஆதரவாக ரவிசாஸ்திரி

வருடாந்திர சம்பள ஒப்பந்த ஊழியர்களின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. அதேநேரம் உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பலருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ishan, shreyas
ishan, shreyaspt web

வருடாந்திர சம்பள ஒப்பந்த ஊழியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. பொதுவாக அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரை குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள் விகித அடிப்படையில் தானாகவே கிரேட்களில் சேர்க்கப்படுவார்கள். அதையொட்டியே இப்பட்டியல் அமையும்.

இதில் 2023-24ஆம் ஆண்டிற்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலின்படி...

A+ பிரிவில்...

ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா என 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

A பிரிவில்...

ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், சுப்மன் கில், கே.எல்.ராகுல் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

B பிரிவில்...

சூர்யகுமார் யாதவ் , ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

C பிரிவில்...

ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாகூர், ஷிவம் துபே, ரவி பிஸ்னாய், ஜித்தேஷ், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப், பரத், ப்ரசித் கிருஷ்ணா, ஆவேஸ் கான், ரஜத் படிதார் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல்?

கிரேட் விதிமுறைகளின்படி, இதுவரை இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் போன்ற வீரர்கள் இங்கிலாந்து அணிக்கெதிரான தர்மசாலா டெஸ்ட் போட்டியில் பங்கேற்றால் கிரேட் சி பிரிவில் இடம்பெறுவார்கள்.

இஷான், ஸ்ரேயாஸ்....

ரஞ்சி டிராபியில் விளையாடாத நிலையில் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ விடுவித்துள்ளது. அதேவேளையில், “தேசிய அணியில் விளையாடாத நிலையில் உள்ள வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இரு முக்கிய வீரர்கள் (இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர்) கிரேட் பட்டியலில் இடம்பெறாதது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “கிரிக்கெட்டில் கம்பேக்ஸ்-தான் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. சவால்களை எதிர்கொள்ளுங்கள், வலுவாக திரும்பி வாருங்கள். உங்களது கடந்த கால சாதனைகள் உங்களைப் பறைசாற்றுகின்றன. நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com