WheelChair-ல் அணிக்காக நின்றபோதும் அவமதித்த RR..? தலைமை பயிற்சியாளர் பதவியை தூக்கி எறிந்த டிராவிட்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகினார் ராகுல்ட் டிராவிட்
எதிர்கால முடிவாக ராகுல் டிராவிட்டை அவமதித்த ராஜஸ்தான் அணி
தலைமை பயிற்சியாளர் பதிவியிலிருந்து விலகி ஷாக் கொடுத்த முராகுல் டிராவிட்
ஐபிஎல் டி20 லீக் முதன்முதலாக தொடங்கப்பட்டபோது அறிமுக சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதற்கு பிறகு ஒரு கோப்பை கூட வெல்ல முடியாமல் தடுமாறிவருகிறது.
அவர்களுடைய இரண்டாவது சிறந்த ரன்னாக 2022 ஐபிஎல் இறுதிப்போட்டிவரை முன்னேறி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் 2025 ஐபிஎல் தொடரில் படுமோசமாக செயல்பட்ட ராஜஸ்தான் 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றிபெற்று 9வது இடத்தில் முடித்தது.
இந்த சூழலில் எதிர்கால அணிக்காக கட்டமைப்பு மதிப்பாய்வை சமீபத்தில் நிகழ்த்திய ராஜஸ்தான் அணி, ராகுல் டிராவிட் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
ராகுல் டிராவிட்டை அவமதித்ததா ராஜஸ்தான்..
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அந்த அணியிலிருந்து வெளியேறவிருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையில், தற்போது அவ்வணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட்டும் விலகியிருப்பது பல்வேறு கேள்விகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் வெளியிட்டுக்கும் அறிக்கையில், "தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐபிஎல் 2026-க்கு முன்னதாக தனது பதவிக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவார்" என்று தெரிவித்துள்ளது. மேலும் "டிராவிட் பல ஆண்டுகளாக ராயல்ஸ் அணியின் பயணத்தில் மையமாக இருந்து வருகிறார். அவரது தலைமை ஒரு தலைமுறை வீரர்களை உருவாக்க காரணமாக அமைந்துள்ளது, அணிக்குள் வலுவான மதிப்புகளை விதைத்துள்ளது. ஆனால் எதிர்கால அணியின் கட்டமைப்பு குறித்த மதிப்பாய்வு செய்யப்பட்ட போது ராகுல் டிராவிட்டுக்கு அணியில் ஒரு பரந்த பதவி வழங்கப்பட்டது, ஆனால் அவர் அதை ஏற்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி பார்த்தால், அவர்கள் ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக வைத்திருக்க விரும்பவில்லை என்பது தெளிவாக புரிகிறது. அதேநேரத்தில் அவர்கள் ராகுலுக்கு வேறோரு பொறுப்பு வழங்கவும் தயாராகவே இருந்துள்ளனர் என்பதும் புரிகிறது. ஆனால் 2024 டி20 உலகக்கோப்பையை வென்றவரான ராகுல் டிராவிட், 2025-ல் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஒரே ஆண்டில் பதவியிலிருந்து விலக நிர்பந்தித்ததால் அணியிலிருந்து விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, 2025 ஐபிஎல் சீசன் முழுவதும் ராகுல் டிராவிட் சக்கர நாற்காலியில் தான் இருந்தார். ஆனால் சக்கர நாற்காலியில் இருந்தபோதிலும், அவர் தனது அணியான ராஜஸ்தான் ராயல்ஸுடன் தொடர்ந்து ஈடுபட்டு, தனது வீரர்களை ஆதரிப்பதற்காக போட்டிகள் மற்றும் பயிற்சி அமர்வுகளில் கலந்து கொண்டார். பயிற்சியின் போது வீரர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல்களைப் பயன்படுத்தியதால், அணி மீதான அவரது அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு தலைமை பயிற்சியாளரை ராஜஸ்தான் ராயல்ஸ் அவமதித்து விட்டதாக ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் 2011-ல் ராயல்ஸ் அணியில் ஒரு வீரராக இணைந்தார். பின்னர் 2012 மற்றும் 2013 ஆகிய இரண்டு சீசன்களில் கேப்டனாக அணியை வழிநடத்தினார். மேலும் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் அவர் அணியின் இயக்குநராகவும் வழிகாட்டியாகவும் பணியாற்றினார்.