ரியான் பராக் - சஞ்சு சாம்சன் - தோனி
ரியான் பராக் - சஞ்சு சாம்சன் - தோனிweb

சஞ்சு சாம்சன் வெளியேற காரணம் ரியான் பராக்..? RR-ல் நிகழும் குழப்பம்! தோனிக்கு மாற்றாக சஞ்சு?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், 2026 ஐபிஎல்லில் அணியிலிருந்து விடுவிக்க கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஒவ்வொரு சீசனிலும் பல்வேறு மாற்றங்களையும், வீரர்களின் டிரேட்களையும் கொண்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திவருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா வெளியேறி, மும்பை இந்தியன்ஸுக்கு வந்தபிறகு வீரர்களின் வர்த்தகமானது ஐபிஎல்லில் சுவாரசியத்தை கூட்டியுள்ளது.

சஞ்சு சாம்சன் - தோனி
சஞ்சு சாம்சன் - தோனிX

அந்தவகையில் 2026 ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் என்ற இரண்டு வீரர்கள் டிரேட் செய்யப்படலாம் என்ற பேச்சு வெளிவரத் தொடங்கியுள்ளது.

கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்

அதிலும் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வரவிருப்பதாகவும், கேஎல் ராகுல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வரவிருப்பதாகவும் தகவல் கசிந்துவருகின்றன.

ரியான் பராக் - சஞ்சு சாம்சன் - தோனி
அது ’தல’ கூடவே பொறந்தது.. அனிருத், ருதுராஜ் வசனம் + கூலி பாடல்.. தோனியின் மாஸ் வீடியோ!

சஞ்சுசாம்சன் வெளியேற்றத்திற்கு ரியான்பராக் தான் காரணமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் வெளியேறவிருப்பதாகவும், அவர் சிஎஸ்கே அணிக்கு தோனிக்கு மாற்றாக டிரேட் செய்யவிருப்பதாகவும், அதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தான் பேச்சுவார்த்தைக்கு உதவியதாகவும் சொல்லப்படுகிறது.

அஸ்வின் முதலிய தேவையற்ற வீரர்களை வெளியேற்றிவிட்டு பெரிய தொகை கொடுத்து சஞ்சு சாம்சனை டிரேட் செய்வதே முடிவு என்று தகவல் கசிந்துவருகிறது.

அஸ்வின், சஞ்சு சாம்சன்
அஸ்வின், சஞ்சு சாம்சன்ட்விட்டர்

அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோசமான சீசனுக்கு பிறகு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனை தேடிவருவதாகவும், கேஎல் ராகுல் டெல்லியிலிருந்து வெளியேறி கேகேஆர் அணிக்கு வரவிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

பத்ரிநாத்
பத்ரிநாத்

இந்நிலையில் சமீபத்திய யூடியூப் சேனல் வீடியோவில் பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேற ரியான் பராக் தான் காரணம் என்று கூறியுள்ளார். ராஜஸ்தான் அணி ரியான் பராக்கை கேப்டன் மெட்டீரியலாக பார்ப்பதாகவும், சஞ்சு சாம்சன் எப்படி பராக்கிற்கு கீழ் விளையாட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியை விட கேகேஆர் அணிக்கு தான் சரியான தேர்வாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

ரியான் பராக் - சஞ்சு சாம்சன் - தோனி
”என்னையும், வாசிம் அக்ரமையும் விட சிறந்தவர் பும்ரா..” - வக்கார் யூனிஸ் புகழாரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com