CSK vs PBKS | “எங்க வெற்றிக்கு தல-தான் காரணம்..” CSK அணியை ட்ரோல் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
PBKS vs CSK
PBKS vs CSKTwitter

ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு போட்டிப்போடுவது இல்லாமல், வரவர ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் மற்ற அணிகளை ட்ரோல் செய்வதில் அதிக கவனம் செலுத்திவருகின்றன. அதிலும் சமீபத்தில் ஆர்சிபி அணியை பங்கமாக கலாய்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்ரோல் செய்தது இணையத்தில் வைரலானது.

PBKS vs CSK
2வது முறை| ஐபிஎல் விதியை மீறும் ஹர்திக் பாண்டியா.. தண்டிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!

இந்நிலையில் நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியை தொடர்ச்சியாக 5 முறை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி, பல ட்ரோல் பதிவுகளை போட்டு சிஎஸ்கே-வை பயங்கரமாக கலாய்த்திருக்கிறது.

ஒரு பரபரப்பான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னையில் இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் டாஸ் வெல்வதற்கு ராசியே இல்லாத ராஜாவாக இருந்துவரும் ருதுராஜ், இந்த போட்டியிலும் டாஸை கோட்டைவிட்டார். டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே!

பதிரானா, துஷார் தேஸ்பாண்டே என்ற இரண்டு மேட்ச் வின்னிங் பவுலர்கள் இந்த போட்டியில் இல்லாததால், நல்ல ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி பேட்டிங் செய்தது. ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பஞ்சாப் பவுலர்கள், சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

ருதுராஜ்
ருதுராஜ்

பஞ்சாப் அணி நன்றாகவே பந்துவீசினாலும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய ருதுராஜ் மற்றும் ரஹானே இருவரும் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.

PBKS vs CSK
ரிங்கு மனம் உடைந்துவிட்டார்.. இனிப்பு, வெடி உடன் தயாராக இருந்தோம்! -எமோசனலாக பேசிய ரிங்கு சிங் தந்தை

ஆனால் 9வது ஓவரை வீசவந்த ஹர்ப்ரீத் ப்ரார் ராஹானேவை 29 ரன்னில் வெளியேற்றியது மட்டுமில்லாமல், களத்திற்கு வந்த அதிரடி வீரர் ஷிவம் துபேவையும் 0 ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டார். உடன் 2 ரன்னில் வெளியேறிய ஜடேஜாவும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, நல்ல நிலைமையில் இருந்த சிஎஸ்கே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

சீட்டுகட்டு போல விக்கெட்டுகள் சரிய, தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
csk - சிஎஸ்கே
csk - சிஎஸ்கே

அடுத்து களமிறங்கிய சமீர் ரிஸ்வி பந்தை டைம் செய்வதில் தடுமாற, அதிக நேரம் களத்தில் இருந்த கேப்டன் ருதுராஜால் கூட ரன்களை எடுத்துவர முடியவில்லை. 23 பந்துகளில் 21 ரன்கள் என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வி வெளியேற, பொறுத்தது போதுமென அதிரடிக்கு திரும்பிய கேப்டன் ருதுராஜ் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 62 ரன்கள் அடித்து ரன்களை எடுத்துவந்தார்.

உடன் கடைசியில் வந்து அதிரடி காட்டிய மொயின் அலி மற்றும் தோனி இருவரும் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என பறக்கவிட 20 ஓவர் முடிவில் 162 ரன்களை எடுத்துவந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சுலபமாக வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி!

163 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, தொடக்கம் முதலே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிக்சர் பவுண்டரி என முதலில் அதிரடியை தொடங்க, கடந்த போட்டியில் சதமடித்து ஃபார்மிற்கு திரும்பிய பேர்ஸ்டோ 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு மிரட்டிவிட்டார்.

உடன் களத்திற்கு வந்த ரைல் ரோஸ்ஸோவும் அவருடைய பங்கிற்கு 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என துவம்சம் செய்ய 11 ஓவர்களுக்கே 100 ரன்களை கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணி சேஸிங்கை சுலபமாக்கியது.

கடைசியாக ஜோடி சேர்ந்த ஷசாங் சிங் மற்றும் கேப்டன் சாம் கரன் இருவரும் நிலைத்து நின்று விளையாடி, பஞ்சாப் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ச்சியாக 5வது போட்டியில் வீழ்த்தி அசத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 4 வெற்றிகளையும் பதிவுசெய்து கெத்துக்காட்டியுள்ளது பஞ்சாப் அணி.

சிஎஸ்கேவை ட்ரோல் செய்த பஞ்சாப் அணி!

ஒரு அற்புதமான வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ட்ரோல் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, சோலி முடிஞ்சது என்ற மாஸ்டர் பட விஜய் சேதுபதியின் மீம்-ஐ போட்டு கலாய்த்தது.

பின், ‘கோடி பேர் இருக்காண்டா எனக்குன்னு’ என்ற மாஸ்டர் பட விஜய் மீம் போட்டும் பங்கமாக்கியது! எல்லாத்தையும் நீங்களே பண்ணிட்டா எப்படி ப்ரோ என பொறிகின்றனர் சென்னை ரசிகர்கள்!

அதுமட்டுமல்லாமல் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, புள்ளிப்பட்டியலில் 7வது இடம் என மாற, எங்கள் வெற்றிக்கு தல-தான் காரணம் என பங்கமாக கலாய்த்து பதிவிட்டது பஞ்சாப் அணி. அதை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் “ஆணவத்துல ஆடாதிங்க, எல்லாம் எங்க நேரம்” என கமண்ட் செய்துவருகின்றனர். இருப்பினும் ஆய்த எழுத்து மீம், சென்னை 600028 மீம், மாஸ்டர், சிவாஜி படங்களின் மீம் என தமிழ் சினிமா மீம்களை பகிர்ந்து, சென்னை ரசிகர்களை புகைய வைத்திருக்கிறது பஞ்சாப் அணி.

போட்டிக்கு பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், போட்டியில் டாஸ் வெல்ல முடியாதது அதிக அழுத்தத்தை கொடுப்பதாகவும், டாஸ் போடுவதற்கெல்லாம் பயிற்சி செய்துவருவதாகவும், டாஸ்ஸை வெல்ல என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். எல்லாவற்றையும் மீறி

ஆடும் 11 வீரர்களையும், அவர்களுக்கான இடத்தை சரியாக பொறுத்துவதிலும்தான் தொடர்ந்து சென்னை அணி சொதப்பிவருகிறது. அந்த இடத்தில்தான் அவர்கள் தோல்வியை தழுவி வருகின்றனர்.

விரைவாக அதிலிருந்து மீண்டு சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

PBKS vs CSK
‘இந்தியா அரையிறுதிக்கு முன்னேறாது..’! செமி பைனல் செல்லக்கூடிய 4 அணிகளை கணித்த மைக்கேல் வாகன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com