ஹர்திக் பாண்டியா இல்லை.. சூர்யகுமார் தான் செல்லப்போகிறார்! சிஎஸ்கே-எம்ஐ Trade-ல் ட்விஸ்ட்!
2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா டிரேட் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், சூர்யகுமார் யாதவ் மும்பை அணியிலிருந்து வெளியேற வாய்ப்பு அதிகரித்துள்ளது என சொல்லப்படுகிறது.
2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா டிரேட் விவகாரம் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஒருபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் 33 நம்பர் உடன் போட்ட டிரேட் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், ஹர்திக் பாண்டியா சென்னை வரப்போகிறார் என்ற செய்தி பேசுபொருளாக இருந்துவருகிறது. மறுபக்கம் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், மும்பையின் புதிய தலைமை பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு ஹர்திக் பாண்டியாவை சமாதானம் செய்து மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே அவரை வைத்திருக்க முயற்சிசெய்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.
இவையெல்லாவற்றையும் கடந்து தோனியுடன் நல்ல ஃபிரண்ட்ஷிப்பை கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியா, தோனி அழைப்பிற்கு ஏற்று சென்னைக்கு வரப்போவதாகவும் சொல்லப்படுகிறது. நவம்பர் 15ஆம் தேதி தக்கவைக்கப்படும் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், அதற்குள் டிரேட் குறித்த செய்திகள் பேசுபொருளாக இருந்துவருகின்றன.
இந்தசூழலில் தான் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை வென்ற சூர்யகுமார் யாதவ் இருக்கும்போது, மீண்டும் ரோகித் சர்மாவே மும்பையின் கேப்டனாக நியமிக்கப்படுவது அணியில் குழப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட சூர்யகுமார் யாதவ் விரக்தியில் இருந்துவரும் நிலையில், ஹர்திக் பாண்டியா இல்லாதபோது அவரை கேப்டனாக்க நினைப்பதில் தவறில்லை என்று சில ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தான் ஹர்திக் பாண்டியா டிரேட் விவகாரத்திற்கு மத்தியில் சூர்யகுமார் யாதவும் மும்பை அணியிலிருந்து வெளியேற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

