\
மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்தியா
மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்தியாbcci

’மகளிர் உலக சாம்பியன் இந்தியா..’ காயங்களால் எழுதப்பட்ட வெற்றி! #OnThisDay

கடந்த ஆண்டு இதே நாளில் தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் தோற்கடித்து முதல் உலகக்கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி.
Published on: 

2025 மகளிர் உலகக்கோப்பையை ஒரு மேஜிக் என்றுதான் சொல்லவேண்டும். பொதுவாகவே இந்திய பெண்கள் கிரிக்கெட் மீது ’அழுத்தம் நிறைந்த போட்டிகளில் அவர்கள் சொதப்பி விடுவார்கள், அவர்களால் ஒரு உலகக்கோப்பையை கூட வெல்லவே முடியாது’ என்ற கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

போதாக்குறைக்கு 2025 மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் சூழல் இந்திய அணிக்கு ஏற்பட்டது. அவ்வளவுதான் ஆஸ்திரேலியாவை எல்லாம் இந்தியா வீழ்த்தும் என்று கனவில் கூட காணாதீர்கள், ஆடவர் அணியாலாயே ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியவில்லை, இவர்கள் எங்கிருந்து வீழ்த்த போகிறார்கள் என்று ஏலனமான கருத்துகள் வைக்கப்பட்டன.

ஆனால் எல்லா எதிர்ப்புகள், அவமானங்கள், வசைச்சொற்கள் அனைத்தையும் கடந்துவந்த இந்திய மகளிர் அணி, 7 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. அதிலும் 339 ரன்களை சேஸ்செய்து அதிகபட்ச ரன்களை சேஸ்செய்த அணியாக வரலாறு படைத்தது இந்தியா.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி, ஷபாலி வெர்மா, தீப்தி சர்மாவின் அபாரமான அரைசதத்தால் 298 ரன்களை போஸ்ட் செய்தது. 299 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணியில், அவ்வணியின் கேப்டன் லாரா வுல்வர்ட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் சதமடித்து இந்தியாவிற்கு மரண பயத்தை கொடுத்தார். இப்போது போட்டி லாராவிற்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் எதிராக மாறியது.

போட்டியை பார்த்த ஒவ்வொரு இந்திய ரசிகனும் ‘அந்த லாராவ யாராவது அவுட்டாக்குங்கப்பா’ என்ற மனக்குமுரலை வெளிப்படுத்தினர். 2024 டி20 உலகக்கோப்பையில் சூர்யகுமார் யாதவ் பிடித்த தலைசிறந்த கேட்ச்சை போன்றே, 2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் ராதா யாதவ் ஒரு அற்புதமான கேட்ச்சை பிடித்து லாரா வுல்வர்ட்டை அவுட்டாக்கினார். பின்னர் இறுதி விக்கெட்டுக்கான கேட்ச்சை பிடித்த இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் மைதானத்தைச் சுற்றிவந்து வெற்றியை கொண்டாடிய காட்சி இன்றும் கண்களில் அப்படியே விரிகின்றன. என்ன ஒரு வரலாற்று வெற்றி.. ஒவ்வொரு இந்திய பெண்குழந்தையும் கிரிக்கெட்டை கனவுகான வைக்கும் ஒரு புதிய அத்தியாயம் அன்று பிறந்தது.. காலத்தால் அழிக்கவே முடியாது ஒரு அசாதாரண வெற்றியாகும்!

மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்தியா
’வரலாற்றில் முதல்முறை..’ ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பை வென்றது ஆப்கானிஸ்தான்!