ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 சதமடித்தார் இலங்கை வீரர் பதும் நிசங்கா
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 சதமடித்தார் இலங்கை வீரர் பதும் நிசங்காweb

டி20 உலகக்கோப்பை | வெளியேறும் ஆஸ்திரேலியா..? முதல் சதமடித்த நிசங்கா.. இலங்கை அபார வெற்றி!

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.
Published on
Summary

இலங்கை அணியின் பதும் நிசங்கா, சதமடித்து ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்விக்கு அழைத்துச்சென்றார். இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

2026 டி20 உலகக்கோப்பை
2026 டி20 உலகக்கோப்பைx

20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா முதலிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.

இந்நிலையில் ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா, வெற்றிபெற வேண்டிய முக்கியமான போட்டியில் இன்று இலங்கையை எதிர்கொண்டு விளையாடியது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 சதமடித்தார் இலங்கை வீரர் பதும் நிசங்கா
பாகி. பரிதாப தோல்வி.. பாதியிலேயே நடையைக் கட்டிய வாரியத் தலைவர்.. சாடிய சோயிப் அக்தர்!

சதமடித்த நிசாங்கா.. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வுசெய்ய ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் அதிரடியாக விளையாடி 56 மற்றும் 54 ரன்கள் அடித்து அசத்தினர். ஆனால் அதற்கு பிறகு களமிறங்கிய வீரர்கள் பெரிதாக அடிக்காத நிலையில், 20 ஓவரில் 181 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா அடித்தது.

ஆஸ்திரேலியா டி20 அணி
ஆஸ்திரேலியா டி20 அணி

182 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இலங்கை அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தாலும் பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டீஸ் இருவரும் சேர்ந்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 51 ரன்கள் அடித்து குசல் மெண்டீஸ் அவுட்டாகி வெளியேறினாலும், கடைசிவரை நிலைத்து நின்று 52 பந்தில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களை பறக்கவிட்டு 100 ரன்கள் அடித்த நிசங்கா இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

பதும் நிசங்கா
பதும் நிசங்கா

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்ற இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியது. அதேநேரத்தில் 3 போட்டிகளில் விளையாடி 2 தோல்விகளை சந்தித்திருக்கும் ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு சென்றுள்ளது. 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே மீதமிருக்கும் 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட ஆஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

நடப்பு டி20 உலகக்கோப்பையின் முதல் சதத்தை பதிவுசெய்த பதும் நிசங்கா, ஜெயவர்த்தனேவிற்கு பிறகு இலங்கைக்காக டி20 உலகக்கோப்பையில் சதமடித்த 2வது வீரராக சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 சதமடித்தார் இலங்கை வீரர் பதும் நிசங்கா
’படுதோல்வி..’ மொத்தமாக சோடை போன பாகிஸ்தான்.. மிரட்டி வென்ற இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com