\
sl vs pak
sl vs paksri lanka cricket

1 விக்கெட்டில் வரலாற்று வெற்றி.. அடுத்த போட்டியே 110 ரன்னுக்கு ALLOUT.. கணிக்கமுடியாத PAK!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் வென்ற பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக 110 ரன்னில் சுருண்டது.
Published on: 
Summary

2027 உலகக்கோப்பைக்கு தயாராகும் முத்தரப்பு தொடரில், பாகிஸ்தான் 110 ரன்னுக்கு சுருண்டு இலங்கையிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி. பாகிஸ்தான் அணியின் கணிக்கமுடியாத ஆட்டம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

2027 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தானில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 அணிகள் மோதிவருகின்றன. ஹாரி ப்ரூக்கின் அதிவேக இரட்டை சதம், இலங்கையின் 430 ரன்கள் ரன்சேஸ், பாகிஸ்தானின் 1 விக்கெட்டில் வெற்றி என தொடரே கலைகட்டிவருகிறது.

இந்தசூழலில் தான் முந்தைய போட்டியில் இங்கிலாந்தை வெல்லவே முடியாத இடத்திலிருந்து வென்றுகாட்டிய பாகிஸ்தான், இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் 110 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்துள்ளது.

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 25.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக பாபர் அசாம் 29 ரன்கள் அடித்தார். இலங்கை வேகப்பந்துவீச்சாளர் தில்சன் மதுசங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

111 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இலங்கை 18.1 ஓவரில் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணியின் இருவேறு ஆட்டங்களை பார்த்த ரசிகர்கள் கணிக்கமுடியாத அணி பாகிஸ்தான் என பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

sl vs pak
5 ஓவரில் 100 ரன்கள்.. 2 உலகசாதனை படைத்த அபிஷேக்-சூர்யவன்ஷி ஜோடி!
sl vs pak
35 பந்தில் சதமடித்த அபிஷேக் சர்மா.. 30 பந்தில் ஏன் அடிக்கல? யுவராஜ் சிங் பதிவு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com