bumrah - zahoor khan
bumrah - zahoor khanweb

”பும்ரா என்னிடம் தான் பந்துவீச கற்றுக்கொண்டார்..” பாகிஸ்தானில் பிறந்த பவுலர் பேச்சால் அதிர்ச்சி!

பும்ரா தன்னுடைய ஆயுதமாக வைத்திருக்கும் மெதுவான பால்களை வீச தன்னிடம் இருந்து தான் கற்றுக்கொண்டார் என பாகிஸ்தானில் பிறந்த பந்துவீச்சாளரான ஜாகூர் கான் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் யுஏஇ-க்காக விளையாடுகிறார்..
Published on
Summary

பாகிஸ்தானில் பிறந்த பவுலர் ஜாகூர் கான், இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தன்னிடமிருந்து ஸ்லோயர் பந்துகளை கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். 2019 ஐபிஎல் போட்டியில் நெட் பவுலராக இருந்தபோது பும்ரா தன்னிடம் இருந்து பந்து வீச்சு வேரியேஷனை கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

’இந்தியாவின் பொக்கிஷம்’ என அழைக்கப்படுவர் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. அவர் நினைத்தால் எதிரணியின் கையில் இருக்கும் ஆட்டத்தை கூட தலைகீழாக புரட்டிப்போட முடியும் என முன்னாள் ஜாம்பவான்கள் புகழ்ந்துவரும் நிலையில், 2026 டி20 உலகக்கோப்பையிலும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்தியாவின் கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஒரு போட்டியில், ஒரு ஓவரில் கூட 3 சிக்சர்களை விட்டுக்கொடுக்கும் பவுலருக்கு மத்தியில் பும்ரா 2026 டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 4 சிக்சர்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

பும்ரா
பும்ராweb

தன்னுடைய கூர்மையான யார்க்கர், திறமையான ஸ்லோவர் பந்துகளால் எதிரணி வீரர்களை பீட் செய்யும் பும்ராவின் பந்துவீச்சுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில், பாகிஸ்தானில் பிறந்த பந்துவீச்சாளரான ஜாகூர் கான் ‘தன்னிடமிருந்து தான் பும்ரா ஸ்லோயர் பந்துகளை கற்றுக்கொண்டதாக’ கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் நெட் பவுலராக இருந்தபோது தன்னிடமிருந்து பும்ரா ஸ்லோயர் பந்து வேரியேசனை கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அவரின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை..

bumrah - zahoor khan
’உன் கனவு நிஜமாகிடுச்சு அப்பா.. ஆனா நீ இல்லையே..’ - ரிங்கு சிங் எமோசனல் போஸ்ட்!

பும்ரா என்னிடம் தான் கற்றுக்கொண்டார்..

சமூகவலைதளத்தில் வைரலாகிவரும் வீடியோவில் பேசியிருக்கும் பாகிஸ்தானில் பிறந்து யுஏஇ-க்காக விளையாடும் பவுலரான ஜாகூர் கான், “ஒரு கதை சொல்றேன். பும்ரா இதற்கு முன்னால் மெதுவான பந்துகளை வீசுவார், ஆனால் அப்போது அவர் வழக்கமான ஆக்‌ஷனில் வீசுவார். அபுதாபியில் நடந்த ஒரு போட்டியில், அவரும், ட்ரெண்ட் போல்ட், குல்டர்-னைல் என அனைவரும் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்தாங்க. அந்த வருஷம் செப்டம்பரில் ஐபிஎல் நடந்துட்டு இருந்தது. செப்டம்பரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில், 50 டிகிரி வெயில். அதிக வெப்பம் இருக்கும், அதனால் ராத்திரியில் பந்தை சரியாகப் பிடிக்கக் கூட முடியாது, அதிக ஈரப்பதம் இருப்பதால் நனைந்துவிடும்.

பும்ரா
பும்ரா

அப்போது தான் மும்பை இந்தியன்ஸ் என்னை கூப்பிட்டார்கள், நான் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு 7வது நாள் பயிற்சிக்குச் சென்றேன். அன்று இரவு நான் அணியுடன் இருந்தேன். டி10 லீக்கில் நான் மெய்டன் ஓவர் வீசியதால் ஜாகீர் கானும், ராபின் சிங்கும் என்னை அறிந்திருந்தார்கள். நான் நெட்டில் முதல் பந்தை ஒரு யார்க்கராக வீசினேன், அடுத்த ஐந்து பந்துகள் மெதுவாக இருந்தன.

bumrah - zahoor khan
bumrah - zahoor khan

அதற்குபின் நான் அமர்ந்திருந்த போது பும்ரா என்னிடம் நீண்டநேரம் உரையாடினார். அவர் என்னுடைய ஸ்லோயர் பந்துகளை பற்றி கேட்டு, எனக்கும் அந்த ஆக்சனை கற்றுக்கொடுங்கள் என்று கேட்டார். நான் வலைப்பயிற்சியின் போது சொல்கிறேன் என்று கூறினேன். அடுத்தநாள் வலைப்பயிற்சியில் நான் மீண்டும் மெதுவான பவுன்சரை வீழ்த்தினேன். அது பேட்ஸ்மேனை வென்றது. அப்போது மும்பையின் பந்துவீச்சாளராக இருந்த ஷேன் பாண்ட், உங்கள் பிடி என்ன? நீங்கள் ஆஃப்-கட்டர்களை வீசுகிறீர்களா? என்று கேட்டார். இல்லை, அதே பிடிதான் என்று நான் கூறினேன்.

bumrah - zahoor khan
“தோல்வியிலும் எனக்காக நின்றீர்கள்.. தேங்க் யூ பொண்டாட்டி” - மனைவிக்கு நன்றி சொன்ன சாம்சன்!

அப்போது அவர் ஜெயவர்த்தனேவை பார்த்து இது கிரிக்கெட்டில் புதிய விசயம், அவர் மெதுவான பந்துகளை அதே அதிரடியிலும் கை வேகத்திலும் எவ்வளவு நன்றாக வீசுகிறார் என்று பாருங்கள் என்று கூறினார். பின்னர் பும்ரா என்னிடம் தனக்கும் அந்த பிடியை கற்றுக்கொடுக்க கேட்டார். நான் அவருக்கு அதை கற்றுக்கொடுத்தேன், தற்போது அவர் உலகின் சிறந்த பவுலராக இருக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

அவர் பேசியிருக்கும் வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

bumrah - zahoor khan
டி20 உலகக்கோப்பை| விமானம் கிடைக்கவில்லை.. 3rd AC ரயிலில் பயணித்த ஷிவம் துபே.. நடந்த சம்பவம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com