\
afghanistan won hong kong sixes 6th season title
afghanistan won hong kong sixes 6th season titlehong kong sixes 2026

’வரலாற்றில் முதல்முறை..’ ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பை வென்றது ஆப்கானிஸ்தான்!

ஆஸ்திரேலியா போன்ற ஜாம்பவான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு நாடு கோப்பை வெல்வது நடக்காத காரியம் தான், ஆனால் அது ஹாங்காங் சிக்சஸ் தொடரில் சாத்தியமாகியுள்ளது.
Published on: 
Summary

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 5.1 ஓவரில் இலக்கை எட்டிய ஆப்கானிஸ்தான், ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் தனது முதல் கோப்பையை வென்றது. 6 வீரர்கள் கொண்ட அணிகள் மோதும் இந்த தொடரில், ஆப்கானிஸ்தான் அணியின் சாதனை வரலாற்றில் முக்கியமானது.

ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் என்பது 11 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்கள் கொண்ட அணிகள், 6 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடும் போட்டியாகும். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடரில் இந்திய அணி 2005-ம் ஆண்டு கோப்பை வென்றது. நடுவில் சில காரணங்களால் நடத்தப்படாமல் இருந்த இத்தொடர் மீண்டும் 2024 முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் 2026 ஹாங்காங் சிக்சஸ் தொடரானது கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 6 ஓவரில் 115 ரன்கள் அடித்தது. தொடர்ந்து விளையாடிய குல்பதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 5.1 ஓவரிலேயே இலக்கை எட்டி கோப்பையை தட்டிச்சென்றது. இந்தத்தொடரில் ஆப்கானிஸ்தான் வெல்லும் முதல் கோப்பை இதுவாகும்.

இந்தத்தொடரில் பங்கேற்ற இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி உட்பட அனைத்திலும் தோல்வியை சந்தித்தது.

afghanistan won hong kong sixes 6th season title
குறைந்த வேகம், மோசமான பவுலிங்.. புவனேஷ்வரை வெளியேற்ற ஆர்சிபி திட்டம்!