\
Sandeep Lamichhane
Sandeep Lamichhanetwitter

பாலியல் வழக்கில் 8 ஆண்டுகள் சிறை: தண்டனையை எதிர்த்து நேபாள கிரிக்கெட் வீரர் மேல்முறையீடு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனே, சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
Published on

நேபாளத்தின் முன்னாள் கேப்டனும் லெக்ஸ்பின்னருமான சந்தீப் லமிச்சேனேவை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

23 வயதான சந்தீப் லமிச்சேனே கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காத்மாண்டுவில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து 17 வயது மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். வழக்கு நடைபெற்ற நிலையிலும், ஜனவரி மாதம் நேபாள உச்சநீதிமன்றம் சந்தீப்பின் காவலை தளர்த்தியதால் அவர் நேபாள் அணியில் தொடர்ந்து விளையாடினார்.

இந்நிலையில் டிசம்பர் 29ஆம் தேதி மீண்டும் வழக்கு மறுவிசாரணைக்கு வந்த நிலையில், லமிச்சேனே மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. மேலும் தண்டனை தொடர்பான விசாரணை ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனவரி 10ஆம் தேதி அளிக்கப்பட்ட தண்டனை நிலவரத்தில், லமிச்சேனேவை குற்றவாளி என உறுதிசெய்த காத்மண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், 3 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்டவருக்கு 2 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. சந்தீப் சிறைத் தண்டனை பெற்றதால், நேபாள கிரிக்கெட் வாரியம், அவரை இடைநீக்கம் செய்தது. இதையடுத்து, லமிச்சேனேவை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இந்தநிலையில், நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை எதிர்த்து சந்தீப் லமிச்சேனே மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sandeep Lamichhane
பாலியல் வழக்கில் 8 ஆண்டுகள் சிறை! சந்தீப் லாமிச்சனேவை இடைநீக்கம் செய்த நேபாள கிரிக்கெட் வாரியம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com