ஒருநாள் போட்டிகளில் நவீன் உல் ஹக் ஓய்வு: நடப்பு தொடரில் அவரின் பங்கு என்ன?

ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நவீன் உல் ஹக்
நவீன் உல் ஹக்pt web

24 வயதான நவீன் உல் ஹக் 2016 ஆம் ஆண்டு பங்களாதேஷ் உடனான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 22 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். வலதுகை வேகப்பந்து வீச்சாளரான அவர் 27 டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் களம் இறங்கிய அவர், விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. அந்த போட்டியில் 6.3 ஓவர்களை வீசிய அவர் 52 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

நவீன் உல் ஹக் பங்களாதேஷ் உடனான போட்டியில் 1 விக்கெட்டும், இங்கிலாந்து உடனான போட்டியில் 1 விக்கெட்டும், நியூசிலாந்து உடனான போட்டியில் 2 விக்கெட்களையும், பாகிஸ்தான் உடனான போட்டியில் 2 விக்கெட்டும், ஆஸ்திரேலியா உடனான போட்டியில் 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி 9 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. முறையே இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து போன்ற அணிகளை வென்றிருந்தது.

நவீன் உல் ஹக்
சந்தேகப்பட்டவர்களின் வாய்களை சதமடித்து மூடிய ஷ்ரேயாஸ் ஐயர்!

நவீன் உல் ஹக் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக விளையாடும் போட்டிகள் மட்டுமல்லாது ஐபிஎல், எல்.பி.எல், பி.பி.எல், பி.எஸ்.எல் போன்ற தொடர்களிலும் விளையாடி வருகிறார். எனவே, ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்தாலும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது எளிதான முடிவல்ல என்றும், ஆனால் தமது ஆட்டத்தை தொடர இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நவீன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com