9 நாடுகளில் 5 விக்கெட் வீழ்த்தி வரலாறு.. முரளிதரன், வார்னே-க்கு பிறகு 3வது வீரராக நாதன் லயன் சாதனை!

நியூசிலாந்துக்கு எதிராக ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் நாதன் லயன் பல சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
warne - murali - nathan
warne - murali - nathanpt

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு மிட்செல் மார்ஸ் தலைமையில் தலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி 3-0 என வீழ்த்தி ஒயிட் வாஸ் செய்தது.

இந்நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி காம்ரான் கிரீனின் அசத்தலான 174* ரன்கள் சதத்தால் 383 ரன்கள் குவித்தது. அதற்கு பிறகு தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியில், 12 வருட கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் ரன் அவுட்டாகி 0 ரன்னில் வெளியேறினார் கேன் வில்லியம்சன்.

green
green

கேனை தொடர்ந்து ரச்சின் ரவிந்திராவும் டக் அவுட்டில் வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து அணி 113 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்தது. அபாரமாக பந்துவீசிய நாதன் லயன் 4 விக்கெட்டுகள் வீழ்த்த 179 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டானது நியூசிலாந்து அணி.

warne - murali - nathan
"இந்தியாவுக்காக ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம்.."- இஷான் & ஸ்ரேயாஸை விளாசிய கவாஸ்கர்?

5 விக்கெட்டுகள் வீழ்த்தி சம்பவம் செய்த பிலிப்ஸ்!

நியூசிலாந்து 179 ரன்களுக்கு சுருண்ட நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து அணி தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. ஸ்டீவன் ஸ்மித்தை டக் அவுட்டிலும், லபுசனேவை 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றி டிம் சவுத்தீ ஆஸ்திரேலியாவை கலக்கி போட்டார். சவுத்தீ கோடு போட அதில் ரோடு போட்ட பிலிப்ஸ், கவாஜா, காம்ரான் கிரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஸ் மற்றும் அலெக்ஸ் கேரி என 5 கிளாஸ் வீரர்களின் விக்கெட்டுகளை தட்டித்தூக்கி கெத்துக்காட்டினார்.

glenn phillips
glenn phillips

க்ளென் பிலிப்ஸ் அபாரமான பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் க்ளென் பிலிப்ஸ், 16 ஆண்டுகளுக்கு சொந்த மண்ணில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் முதல் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்து அசத்தினார்.

warne - murali - nathan
16 ஆண்டுகால சாதனை - டேனியல் விட்டோரி வரிசையில் க்ளென் பிலிப்ஸ்! 164 ரன்னுக்கு சுருண்ட ஆஸி!

10 விக்கெட் வேட்டையாடிய நாதன் லயன்!

நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 369 ரன்களை ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்க, இந்த முறை ஓப்பனிங் ஸ்பெல்லிலேயே நாதன் லயனை கொண்டுவந்தார் கேப்டன் பேட் கம்மின்ஸ். புதிய பந்திலேயே ஸ்பின்னில் கலக்கிய லயன், டாம் லாதம் மற்றும் கேன் வில்லியம்சன் இரண்டு பேரையும் விரைவாக வெளியேற்றி கலக்கிப்போட்டார். 3 விக்கெட் இழந்த நிலையில் கைக்கோர்த்த ரச்சின் மற்றும் மிட்செல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரச்சின் ரவிந்திரா அரைசதம் அடித்து அசத்தினார்.

Nathan Lyon
Nathan Lyon

அதிக நேரம் இந்த ஜோடியை நிலைக்க விடாத லயன், ரச்சினை 59 ரன்னில் வெளியேற்றியது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து வந்த டாம் பிளண்டெல், க்ளென் பிலிப்ஸ், டிம் சவுத்தீ என தொடர்ச்சியாக விக்கெட்டுகளாக வீழ்த்த நியூசிலாந்து அணி தடுமாறியது. லயன் 6 விக்கெட்டுகளை கைப்பற்ற 196 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நாதன் லயன் பல சாதனைகளை தன்வசப்படுத்தினார்.

warne - murali - nathan
ரஞ்சி அரையிறுதி: 6 விக். சாய்த்த சாய் கிஷோர்! 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஒரே பவுலராக அசத்தல்!

9 நாடுகளில் 5 விக்கெட்டுகள் பதிவுசெய்து அசத்தல்!

நியூசிலாந்து மண்ணில் 5 விக்கெட்டுகளை பதிவுசெய்திருக்கும் நாதன் லயன், 9 நாடுகளில் 5 விக்கெட்டுகளை பதிவுசெய்த 3வது சர்வதேச வீரராக மாறி சாதனை படைத்தார். இதுவரை முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே இரண்டு ஜாம்பவான் வீரர்கள் மட்டுமே 9 நாடுகளில் 5 விக்கெட்டுகளை பதிவுசெய்திருக்கும் நிலையில், தற்போது நாதன் லயனும் “இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து” முதலிய 9 நாடுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

nathan lyon
nathan lyoncricinfo

அதிக நாடுகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்:

9 நாடுகள் - முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, நாதன் லயன்

8 நாடுகள் - வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், டேல் ஸ்டெய்ன்

nathan lyon
nathan lyon

மேலும் படைக்கப்பட்ட சாதனைகள்..

* 18 வருடங்கள் - 2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சுழற்பந்துவீச்சாளர் நியூசிலாந்து மண்ணில் 10 விக்கெட்டுகளை பதிவுசெய்துள்ளார். டேனியல் விட்டோரி, முரளிதரனுக்கு பிறகு நாதன் லயன் அதை செய்துள்ளார்.

* 2வது வீரர் - நான்காவது இன்னிங்ஸில் 119 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் நாதன் லயன், 138 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் வார்னே-க்கு பிறகு நான்காவது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

* முதல் வீரர் - நியூசிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் சிறந்த பவுலிங்கை பதிவுசெய்திருக்கும் முதல் ஆஸ்திரேலியா பவுலராக நாதன் லயன் மாறியுள்ளார். 1997-ல் டென்னிஸ் வில்லி 72 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதே சிறந்ததாக இருந்த நிலையில், நாதன் 65 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

warne - murali - nathan
“டேய் ஷர்துல் மாடே அடிச்சது போதும் டா”.. TN-க்கு எதிராக சதமடித்த தாக்கூர்! திட்டி பதிவிட்ட அஸ்வின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com