அஸ்வின் - நாதன் லயன்
அஸ்வின் - நாதன் லயன்web

உங்களுடைய திறமைக்கு மரியாதையை தவிர வேறென்ன செலுத்த முடியும்! - அஸ்வினை புகழ்ந்த நாதன் லயன்!

சமகால கிரிக்கெட்டர்களில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டு ஜாம்பவான் ஸ்பின்னர்களாக நாதன் லயன் மற்றும் அஸ்வின் இருவரும் வலம்வருகின்றனர்.

சமகாலத்தில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் என்றால் அது ஜேமி ஆண்டர்சன், நாதன் லயன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று நபர்கள் மட்டும் தான். அதில் ஸ்பின்னர்கள் என்றால் முதலில் நாதன் லயனை தொடர்ந்து, தற்போது அஸ்வினும் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற பெரிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

நாதன் லயன் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய போது, ” 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2வது ஆஃப் ஸ்பின்னர், வாழ்த்துக்கள் மேட்!” என்று எக்ஸ் தளத்தில் வாழ்த்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது அஸ்வினுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் நாதன் லயன்.

அஸ்வின் - நாதன் லயன்
மில்லியனில் ஒரு பவுலர்; வாழ்த்துக்கள் சாம்பியன்! - 500 விக். வீழ்த்திய அஸ்வினுக்கு குவியும் பாராட்டு

500 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற புதிய மைல்கல்லை படைத்தது மட்டுமில்லாமல் பல்வேறு சாதனைகளையும் தன்பேரில் எழுதினார். அந்தவகையில்..,

* முதல் ஸ்பின்னர் : 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர்.

* 2வது இந்திய வீரர்: அனில்கும்ப்ளேவிற்கு பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றிய 2வது இந்திய வீரர்.

*5வது உலக ஸ்பின்னர்: முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708), அனில் கும்ப்ளே (619), நாதம் லயன் (517) முதலிய 4 ஸ்பின்னர்களுக்கு பிறகு 500 விக்கெட் வீழ்த்திய 5வது ஸ்பின்னர்.

ashwin 500
ashwin 500

* 9வது உலக வீரர்: 8 வீரர்களுக்கு அடுத்தபடியாக 9வது உலக வீரராக 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

*குறைவான பந்தில் 500: மிகக் குறைவான பந்துகளில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் க்ளென் மெக்ராத்துக்கு (25528 பந்துகள்) பிறகு இரண்டாவது வீரராக அஸ்வின் (25714 பந்துகள்) மாறியுள்ளார்.

*குறைவான போட்டிகளில் 500: மிகக் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முரளிதரனுக்கு (87) பிறகு இரண்டாவது வீரராக அஸ்வின் (98) மாறியுள்ளார்.

அஸ்வின் - நாதன் லயன்
”நீயெல்லாம் நல்ல டெஸ்ட் பவுலரா என சந்தேகித்தார்கள்”! - 500 விக்கெட் மைல்கல் குறித்து அஸ்வின் பேச்சு!

அஸ்வினை புகழ்ந்த நாதன் லயன்!

தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கும் நாதன் லயன், “வணக்கம் அஷ், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுடைய இந்த நம்பமுடியாத பயணத்தை பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் நடந்துகொண்டதற்கும் உங்களுடைய திறமைக்கும் மரியாதையை செலுத்துவதை தவிர வேறெதுவும் என்னிடமில்லை. உங்களுக்கு எதிரான போட்டியாளராக நான் இருப்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். உங்களிடமிருந்து இன்னும் நிறைய வர உள்ளன, வாழ்த்துக்கள்!" என லயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஸ்வின் மற்றும் நாதன் லயன் இருவரும் இணைந்து 1017 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இவர்களின் ஆரோக்கியமான போட்டி டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் அதிகமாக நேசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

அஸ்வின் - நாதன் லயன்
”500 டெஸ்ட் விக்கெட்டுகள்”! இந்திய வரலாற்றில் முதல் ஆஃப் ஸ்பின்னர்! வரலாறு படைத்த அஸ்வின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com