”500 டெஸ்ட் விக்கெட்டுகள்”! இந்திய வரலாற்றில் முதல் ஆஃப் ஸ்பின்னர்! வரலாறு படைத்த அஸ்வின்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சாக் கிராவ்லியை வெளியேற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்தார்.
அஸ்வின் 500 விக்கெட்டுகள்
அஸ்வின் 500 விக்கெட்டுகள்Cricinfo

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலிரண்டு போட்டியில் இங்கிலாந்து ஒரு வெற்றியும், இந்தியா வெற்றியும் பெற்றுள்ள நிலையில், தொடரானது 1-1 என சமநிலையில் இருந்துவருகிறது.

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரவிந்திர ஜடேஜாவின் சதத்தால் 445 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களுடன் முதல் இன்னிங்ஸில் விளையாடிவருகிறது.

500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்திய அணியின் நல்ல டோட்டலுக்கு பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு பக்கம் சாக் கிராவ்லி நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு விரட்டிய பென் டக்கட் குறைவான பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். இந்த கூட்டணி 89 ரன்களுக்கு செல்ல, முதல் விக்கெட்டை தேடிய கேப்டன் ரோகித் சர்மா பந்தை அஸ்வின் கையில் கொடுத்தார்.

சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் நிலைத்து நின்று ஆடிய சாக் கிராவ்லியை 15 ரன்னில் வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தார். சாக் கிராவ்லி விக்கெட்டை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 500வது விக்கெட்டை வீழ்த்தி ஜாம்பவான்களின் சாதனை பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அஸ்வின் 500 விக்கெட்டுகள்
"சர்பராஸ் கானுக்காக வருந்துகிறேன்.. அது முழுவதும் என்னுடைய தவறு!" - வருத்தம் தெரிவித்த ஜடேஜா!

அஸ்வின் படைத்த சாதனைகள்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்பது ஜாம்பவான்களுக்கே சொந்தமானது. அந்த வகையில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒரு ஜாம்பவானாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

முதல் ஆஃப் ஸ்பின்னர்: 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன், நாதம் லயன் இருவருக்கு பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டை 3வது ஆஃப் ஸ்பின்னர் மற்றும் இந்தியாவின் முதல் ஆஃப் ஸ்பின்னர் என்ற இமாலய சாதனையை படைத்துள்ளார்.

ashwin
ashwin

2வது இந்திய ஸ்பின்னர்: இந்திய வீரர்களை பொறுத்தவரையில் 619 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அனில் கும்ப்ளேவிற்கு பிறகு 500 விக்கெட்டுகளுடன் இரண்டாவது வீரராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் அஸ்வின்.

9வது உலக வீரர்: அதேபோல உலக கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில், முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708), ஜேமி ஆண்டர்சன் (696), அனில் கும்ப்ளே (619), ஸ்டூவர்ட் பிராட் (604), க்ளென் மெக்ராத் (563), வால்ஸ் (519), நாதம் லயன் (517) முதலிய 8 வீரர்களுக்கு பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய 9வது உலக பவுலராக அஸ்வின் மாறியுள்ளார்.

ashwin 500
ashwin 500

5வது உலக ஸ்பின்னர்: 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய ஸ்பின்னர்களை பொறுத்தவரையில் முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708), அனில் கும்ப்ளே (619), நாதம் லயன் (517) முதலிய 4 வீரர்களுக்கு பிறகு 5வது உலக ஸ்பின்னராக அஸ்வின் மாறியுள்ளார்.

குறைவான போட்டிகளில் 500: மிகக் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் இரண்டாவது வீரராக மாறியுள்ளார் அஸ்வின்.

முரளிதரன் - 87 போட்டிகள்

ரவி அஸ்வின் - 98 போட்டிகள்

அனில் கும்ப்ளே - 105 போட்டிகள்

ஷேன் வார்னே - 108 போட்டிகள்

க்ளென் மெக்ராத் - 110 போட்டிகள்

R Ashwin
R Ashwin

குறைவான பந்துகளில் 500: மிகக் குறைவான பந்துகளில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் இரண்டாவது வீரராக மாறியுள்ளார் அஸ்வின்.

க்ளென் மெக்ரான் - 25528 பந்துகள்

ரவி அஸ்வின் - 25714 பந்துகள்

ஜேம்மி ஆண்டர்சன் - 28150 பந்துகள்

ஸ்டூவர்ட் பிராட் - 28430 பந்துகள்

வால்ஷ் - 28833 பந்துகள்

அஸ்வின் 500 விக்கெட்டுகள்
”இருள் அப்படியே இருந்துவிடப்போவதில்லை”!- மகனின் தாமதமான அறிமுகம் குறித்து சர்பராஸ் தந்தை எமோசனல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com