ரோகித் - கோலி - கம்பீர்
ரோகித் - கோலி - கம்பீர்web

'விராட் கோலி, ரோஹித் வேண்டாம்..?' கம்பீர் நீக்கப்பட்டால் குழப்பம்.. முன்னாள் வீரர் அதிரடி கருத்து!

கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என முன்னாள் வீரர் முனாப் பட்டேல் கூறி இருக்கிறார். குறிப்பாக கோலி, ரோஹித் சர்மா அணியில் தேவையில்லை என அவர் சொன்னதாக சுட்டிக் காட்டி இருப்பது கவனம் பெற்று வருகிறது.
Published on
Summary

இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததிலிருந்து கம்பீர் எடுத்த கடுமையான முடிவுகள், குறிப்பாக டெஸ்டில் கோலி, ரோஹித் ஆதிக்கம் குறைந்தபோது மாற்றங்களைச் செய்தது, பலருக்கு அதிருப்தி அளித்தாலும், முன்னாள் வீரர் முனாப் படேல் அவருக்கு வலுவான ஆதரவு தருகிறார். கம்பீரை நீக்கினால் அணியில் பெரிய குழப்பம் ஏற்படும் என்றும், எந்த ஜாம்பவானையும் நாட்டின் நலனுக்காக தைரியமாக நீக்கும் ஒரே நபர் அவர் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

செய்தியாளர் - விக்னேஷ்

2024 ஜூலை மாதம் இந்திய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல், கம்பீர் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆதிக்கம் குறைந்த போது, அணியில் மாற்றங்களைக் கொண்டு வர அவர் தயங்கவில்லை.

டி20 பேட்டிங் வரிசையில் மாற்றம் குறித்து கம்பீர் பதில்
டி20 பேட்டிங் வரிசையில் மாற்றம் குறித்து கம்பீர் பதில்web

கம்பீரின் அதிரடிப் போக்கு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், முன்னாள் இந்திய வீரர் முனாப் படேல் அவருக்குப் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கினால் இந்திய கிரிக்கெட் அணியில் பெரிய குழப்பம் ஏற்படும். அவர் உண்மையை முகத்திற்கு நேராகப் பேசக்கூடியவர். பலருக்கு இது பிடிக்காது. நிலைமை தவறாகப் போகும்போது, எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவர்களை அணியில் இருந்து நீக்கும் துணிச்சல் அவருக்கு மட்டுமே உண்டு" என்றார்.

ரோகித் சர்மா - விராட் கோலி
ரோகித் சர்மா - விராட் கோலி

மேலும் பேசிய அவர், "விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களிடம் 'நீங்கள் வேண்டாம்' என்று சொல்ல எத்தனை பேருக்கு தைரியம் வரும்? நாட்டின் நலனுக்காகவும், பயிற்சியாளர் பணிக்காகவும் எத்தனை பேரை கம்பீர் பகைத்துக் கொள்கிறார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். வீரர்களைக் கையாள்வது எளிதல்ல, அதை அவர் சரியாகச் செய்கிறார்" என்று முனாப் படேல் கூறி இருக்கிறார்.

ரோகித் - கோலி - கம்பீர்
RCB-ன் புதிய ஹீரோ ரசிக் சலாம்.. லக்னோவை நசுக்கி ஆர்சிபி அபார வெற்றி!

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மாவை நீக்க கம்பீர் பரிந்துரை செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதேபோல் 2025-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் கோலி மற்றும் ரோஹித் மீண்டும் களம் கண்டபோது, அவர்கள் 2027 உலகக்கோப்பைத் திட்டத்தில் இருப்பதை உறுதி செய்ய கம்பீர் மறுத்துவிட்டார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி
2025 சாம்பியன்ஸ் டிராபி

இத்தகைய மோதல்களுக்கு மத்தியிலும், கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை என இரண்டு முக்கியக் கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கம்பீர், ரோஹித் மற்றும் கோலி ஆகிய மூவரும் மீண்டும் இணையவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரோகித் - கோலி - கம்பீர்
ஐபிஎல்லுக்கு விளையாட வந்த ஜிம்பாப்வே வீரர்.. 2 ஆண்டு தடைவிதித்த PCB!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com