டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்cricinfo

MI vs DC| பாண்டியாவிற்கு பதில் சூர்யா கேப்டன்.. 162 ரன்கள் மட்டுமே அடித்த மும்பை!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் 162 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
Published on
Summary

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸை எதிர்கொண்ட இரண்டாவது லீக் போட்டியில், ஹர்திக் பாண்டியா உடல்நலக்குறைவால் இல்லாத நிலையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக களமிறங்கினார். டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்து, ரிக்கல்டன், திலக் வர்மா ஆகியோரை விரைவில் வெளியேற்றியது. ரோகித் சர்மா, சூர்யா இணைந்து எதிர்த்து விளையாடினாலும், மும்பை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

2026 ஐபிஎல் தொடர் பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்டு விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 220 ரன்கள் இலக்கை சேஸ் செய்து மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரின் தொடக்கப்போட்டியில் மும்பை இந்தியன்ஸின் முதல் வெற்றியாக பதிவுசெய்யப்பட்டது.

டெல்லி கேபிடல்ஸ், 2026
டெல்லி கேபிடல்ஸ், 2026

இந்நிலையில் முதல் போட்டிக்கு பிறகு இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸை எதிர்கொண்டு விளையாடுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இப்போட்டியில் உடல்நிலை சரியில்லாததால் ஹர்திக் பாண்டியா விளையாடாத நிலையில், டி20 உலகக்கோப்பை வென்ற சூர்யகுமார் யாத்வ் கேப்டனாக செயல்பட்டார்.

டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
இஷான் கிஷனுக்கு எதிராக கருத்து.. ”SRH கோப்பை வெல்லாது..” வன்மத்தை கக்கிய யுவராஜ் சிங்!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்க வீரராக களமிறங்கிய ரிக்கல்டனை 9 ரன்னிலும், திலக் வர்மாவை 0 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றியது.

18 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தபோதிலும் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய ரோகித் சர்மா அசத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவும் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாச, ரோகித் 35 ரன்னிலும், சூர்யா 51 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்கு இழுத்துப்பிடித்து பந்துவீசிய டெல்லி பவுலர்கள் பெரிதாக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 163 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் டெல்லி அணியில் கேஎல் ராகுல் 1 ரன்னிற்கு ஆட்டமிழந்தார்.

டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
“எங்கிருந்தோ வந்த தோனி கேப்டன் ஆக்கப்பட்டார்..” - 18 வருட ஏமாற்றத்தை வெளிப்படுத்திய யுவராஜ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com