\
mumbai indians new coaches
mumbai indians new coachesmi / ipl / bcci / x

இவங்க எல்லாம் MI கோச்சா..? தரமான பெயர்களை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவை அறிவித்துள்ளது. இந்தியாவின் அதிரடி பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
Published on: 
Summary

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழு முழுமையாக மாற்றம் செய்யப்பட்டு, கீரன் பொல்லார்ட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தசூழலில் புதிய பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு OG ஐபிஎல் அணிகளுக்கும் கடந்த 3 ஐபிஎல் தொடர்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செல்லவில்லை. ஒருபக்கம் தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு எங்கப்பா சிஎஸ்கேவை காணோம் என்ற விதத்தில் தான் சூப்பர் கிங்ஸ் இருந்துவருகிறது.

மறுபக்கம் கடப்பாரை அணி என பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸின் நிலைமையோ கவலைக்கிடமாக இருந்துவருகிறது. கடைசியாக 2020-ல் கோப்பை வென்ற அந்த அணி படுமோசமான ஐபிஎல் சீசன்களையே கடந்துவந்துள்ளது.

mumbai indians 2020 ipl trophy
mumbai indians 2020 ipl trophymumbai indians

2020ஆம் ஆண்டு கோப்பை வென்றபிறகு ஒரு ஐபிஎல்லில் கூட இறுதிப்போட்டிவரை வராத நிலையில், மும்பை இந்தியன்ஸின் பயிற்சியாளர்கள் குழு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. மஹிலா ஜெயவர்த்தனே, லசித் மலிங்கா போன்ற பெரிய பெயர்களும் பயிற்சியாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மும்பை ஜாம்பவான் கீரன் பொல்லார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு கீழ் இருக்கும் பயிற்சியாளர்கள் பட்டியலை இன்று மும்பை அணி வெளியிட்டுள்ளது.

kieron pollard
kieron pollardmumbai indians

இன்றைய அறிவிப்பின் படி, வரவிருக்கும் 2027 ஐபிஎல் தொடருக்காக, ராபின் உத்தப்பாவை பேட்டிங் பயிற்சியாளராகவும், மிட்செல் மெக்கலெனகனை பந்துவீச்சு பயிற்சியாளராகவும், டி. திலீப்பை ஃபீல்டிங் பயிற்சியாளராகவும், தவால் குல்கர்னியை பந்துவீச்சு மேம்பாட்டு பயிற்சியாளராகவும் நியமித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அறிவித்தது.

robin uthappa orange cap holder
robin uthappa orange cap holderx

அதிரடிக்கு பெயர் போன ராபின் உத்தப்பா கேகேஆர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். கேகேஆர் கோப்பை வென்ற 2014 சீசனில் 660 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mitchell McClenaghan
Mitchell McClenaghanipl

அதேபோல மிட்செல் மெக்கலெனகன் மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சு ஜாம்பவான் ஆவார். அவர் மும்பை அணிக்காக 4 கோப்பைகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல குல்கர்னி மும்பையை பிறப்பிடமாக கொண்ட குல்கர்னி, மும்பை தயாரித்த சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராவார். அவருக்கு ஹோம் கிரவுண்ட்டின் சாதகம், பாதகங்கள் அத்துப்படி என்பதால் அவரை சிறப்பு பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். அவர் மும்பைக்காக 2 ஐபிஎல் கோப்பைகள் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

mumbai indians new coaches
மரண அடி.. இந்தியாவின் பந்துவீச்சை சிதறடித்த நியூசிலாந்து.. 259 ரன்கள் குவிப்பு!