MS Dhoni fined for traffic violation in Ranchi
தோனிweb

ரூ.1000 அபராதம்.. நோட்டீஸ்.. தோனிக்கு அடுத்தடுத்த சிக்கல்.. ஜார்க்கண்ட் அரசு அதிரடி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ராஞ்சியில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Published on

கிரிக்கெட் தவிர, விவசாயம் மற்றும் வாகனங்களில் ஆர்வம் காட்டி வரும் தோனி, அதற்காக நிறைய வாகனங்களையும் வாங்கி அவரது பண்ணையில் குவித்து வைத்துள்ளார். இந்த நிலையில், ராஞ்சியில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக எம்.எஸ். தோனி உள்ளார். அவரது தலைமையிலான அணி, 2007 டி20 உலகக்கோப்பை, 2010 மற்றும் 2016 ஆசியக் கோப்பைகள், 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்டவற்றை வென்றது. தவிர, ஐபிஎல்லிலும் சென்னை அணிக்காக 5 முறை கோப்பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். கிரிக்கெட் தவிர, விவசாயம் மற்றும் வாகனங்களில் ஆர்வம் காட்டி வரும் தோனி, அதற்காக நிறைய வாகனங்களையும் வாங்கி அவரது பண்ணையில் குவித்து வைத்துள்ளார்.

MS Dhoni fined for traffic violation in Ranchi
தோனிfile image

இந்த நிலையில், ராஞ்சியில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது வாகனம் வேகவரம்பை மீறியதை ராஞ்சி போக்குவரத்து போலீசார் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ராஞ்சியில் ஒரு குடியிருப்பு நிலத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில வீட்டுவசதி வாரியம் தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியது. குடியிருப்பு நோக்கங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட இந்த சொத்து, வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஞ்சியின் ஹார்மு சாலையில் அமைந்துள்ள இந்த மனையில், தோனி தனது தற்போதைய ரிங் ரோடு வீட்டிற்கு மாறுவதற்கு முன்பு வசித்து வந்தார். இதுவும் பிரச்னையை ஏற்படுத்தியது.

MS Dhoni fined for traffic violation in Ranchi
'4 வயதில் தந்தை இறப்பு.. கிரிக்கெட்டுக்கு வர காரணம் தோனி' - பாகிஸ்தான் வீரர் நெகிழ்ச்சி!

இந்த நிலையில், அபராதம் பற்றிய செய்தி வந்துள்ளது. தோனி மீதான இந்த அபராதம் மற்றும் நோட்டீஸ் விவகாரம் ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஐபிஎல் 2026 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பு பயிற்சி மையத்தில் சக வீரர்களுடன் தோனி இணைந்தார்.பயிற்சி அமர்வில் அனைவரின் கவனத்தையும் தோனி ஈர்த்தார். மார்ச் 1ஆம் தேதி வலைப்பயிற்சியில் இடது கை சுழற்பந்து வீச்சாளரை எதிர்கொண்ட தோனி, வீசப்பட்ட ஒரு வைடு பந்துக்கு, அவர் திடீரென நின்று, சிக்னல் செய்வதுடன் குறும்புத்தனமான டான்ஸ் செய்து அனைவரையும் சிரிக்க வைத்தார். அது, இணையத்தில் வைரலானது.

MS Dhoni fined for traffic violation in Ranchi
2026 IPL | தோனி விளையாடுவாரா? CSK நிர்வாகம் சொல்வதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com