இப்படியுமா!! YouTube-ல் Parenting வகுப்பு; வீட்டிற்குள் மகன்-மகளுக்கு நாஜி வதை முகாம் போன்ற கொடுமை!

அமெரிக்காவின் உட்டா பகுதியில் குழந்தைகளை உணவு வழங்காமல் அடைத்துவைத்து கொடுமை படுத்தியதற்காக தாய்க்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ரூபி ஃபிராங்கே குடும்பம்
ரூபி ஃபிராங்கே குடும்பம்web

உலகளவில் குழந்தைகளை கொடுமைப்படுத்தும் குற்றங்களானது தொடர்ந்து அம்பலமாகி அதிர்வலைகளை ஏற்படுத்திவருகின்றன. சமீபத்தில் கூட பெங்களூரில் AI ஸ்டார்ட் அப் நிறுவனம் நடத்திவரும் தலைமைச்செயல் அதிகாரியான சுசனா சேத் என்பவர், தன்னுடைய 4 வயது மகனை கொலை செய்து சூட்கேஸில் வைத்து எடுத்துவந்ததற்காக கோவா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட செய்தி அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமெரிக்காவில் உட்டா பகுதியை சேர்ந்த 42 வயது ரூபி ஃபிராங்கே என்ற 6 குழந்தைகள் கொண்ட தாய், அவருடைய 2 குழந்தைகளை உணவு வழங்காமலும், அடித்து துன்புறுத்தியும் வீட்டில் வைத்து கொடுமைப்படுத்தியதற்காக 60 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

ரூபி ஃபிராங்கே குடும்பம்
மனித மூளைக்குள் சிப் பொறுத்தும்முயற்சி! முதல் மனிதன் குணமடைந்துவருவதாக எலான் மஸ்க் ட்வீட் #Neuralink

வெளியில் Parenting வகுப்பு.. வீட்டிற்குள் குழந்தைகளுக்கு கொடுமை!

பெற்ற குழந்தைகளையே கொடுமை படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரூபி பிராங்கே என்பவர், தன்னுடைய பிஸினஸ் பார்ட்னரான ஜோடி ஹில்டெப்ராண்ட் என்பவருடன் இணைந்து, யூ-டியூப் பக்கத்தில் ”குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கு அறிவியலை எப்படி புகட்ட வேண்டும் மற்றும் மனிதர்களிடையே சிறப்பான உறவுமுறையை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும்” என பெற்றோர்களுக்கு Parenting வகுப்பு எடுத்துவந்துள்ளார். யூ-டியூப் தளத்தில் இவர்களை 2.3 மில்லியன் ஃபாலோயர்களை பின்பற்றிவருகின்றனர்.

ரூபி ஃபிராங்கே
ரூபி ஃபிராங்கே

இப்படி தன் யூ-டியூப் சேனலில் மற்ற பெற்றோர்களுக்கு குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த ரூபி ஃபிராங்கியை தான், தற்போது காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வெளியில் மற்றவர்களுக்கு உபதேசம் எடுத்துவிட்டு வீட்டிற்குள் தன் 12 வயது மகனுக்கு உணவு , தண்ணீர் என எதுவும் வழங்காமல் கொடுமைப்படுத்தியிருக்கிறார் ரூபி. தன்னுடைய பார்ட்னரான ஜோடி ஹில்டெப்ராண்ட் உதவியுடன் வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம், சிறுவனின் பெரும் முயற்சிக்கு பிறகு வெளியேவந்துள்ளது.

ரூபி ஃபிராங்கே - ஹில்டெப்ராண்ட்
ரூபி ஃபிராங்கே - ஹில்டெப்ராண்ட்

உணவு இல்லாமல் தவித்து வந்த அந்த சிறுவன், வாயில் டேப் ஓட்டபட்டதோடு ஜன்னல் வழியே காயங்களுடன் தப்பித்து பக்கத்து வீட்டுக்காரர்களிடம் உதவி கேட்டபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மகனை மட்டுமல்லாமல் மற்றொரு மகளையும் மோசமான நிலையில் தான் வீட்டுக்குள் அடைத்து வைத்து கொடுமை படுத்தியிருக்கிறார்கள் ரூபி மற்றும் ஜோடி ஹில்டெப்ராண்ட் இருவரும். சாப்பிட எதுவும் கொடுக்காமல் கள்ளிச்செடி மீதெல்லாம் விழசொல்லி கொடுமைபடுத்தியதை ரூபியின் மகள் தெரிவித்துள்ளார்.

ரூபி ஃபிராங்கே
ரூபி ஃபிராங்கே

42 வயதான ரூபிக்கு ஆறு குற்றங்களின் கீழ் அறுபது ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதே தீர்ப்பை ரூபியின் பிஸினஸ் பார்டனர் ஹில்டெப்ராண்ட்டுக்கும் வழங்கியுள்ளது நீதிமன்றம். குற்றத்தை ஒப்புக்கொண்ட ரூபி தன் குழந்தைகளிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார், ஆனால் இதற்கெல்லாம் சரிசமமாக நடத்தப்படாத உலகத்தை குற்றஞ்சாட்டியுள்ளார் ரூபி. பெற்ற குழந்தைகளையே அடைத்துவைத்து கொடுமை படுத்திய இந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரூபி ஃபிராங்கே குடும்பம்
இனி நண்பர்களின் Chat-ஐ தேடவேண்டாம்! வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் தனித்தனி Tab - 3 புதிய அம்சங்கள்!

”என் குழந்தைகள் சாத்தான்கள் என நம்ப வைத்தார்கள்” - ரூபி சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!

இந்த விசாரணையின் போது பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியானது. சிறுவன் தப்பித்து சென்று போலீசாரிடம் தகவல் தெரிவித்த பின்னர், அந்த வீட்டிற்கு வந்து அதிகாரிகள் சோதனையிட்டனர். பார்வையிட்டு அதிர்ந்து போன அவர்கள், கிட்டதட்ட நாஜி காலத்தில் உருவாக்கப்பட்ட வதை முகாமின் மாதிரி போல் இருந்ததாக தெரிவித்தனர்.

தன்னுடைய சக யூட்யூபரும் தொழில் பார்ட்னருமான ஹில்டெபரண்ட் கட்டுப்பாட்டில் தான் இருந்ததாக தெரிவிக்கும் ரூபி, தன்னுடைய கடைசி இரண்டு குழந்தைளும் சாத்தான்கள் என்றும் அவர்கள் தூய்மையடைய அவர்கள் இத்தகைய தொடர்ச்சியான தண்டனை தேவை என்றும் நம்ப வைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறினார். தன்னுடைய குழந்தைகளை இந்த இன்னல்களில் இருந்து மீட்ட அனைவருக்கும் நன்றியையும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com