\
mitchell starc picks 4 wickets in 6 balls against south africa
mitchell starc picks 4 wickets in 6 balls against south africascreenshot

6 பந்தில் 4 WK.. மரண கம்பேக் கொடுத்த ஸ்டார்க்.. வலுவான தொடக்கத்தை வீணடித்த SA! 329-க்கு ஆல்அவுட்!

மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த தென்னாப்பிரிக்கா அணி 329 ரன்னுக்கு ஆல்அவுட்டானது.
Published on: 
Summary

மிட்செல் ஸ்டார்கின் மிரட்டலான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்காவின் வலுவான தொடக்கம் சிதைந்தது. 148 ரன்னுக்கு 0 விக்கெட் என தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 329 ரன்னில் ஆல்அவுட் ஆகி ஆஸ்திரேலியாவுக்கு சவாலான இலக்கை அமைத்தது.

3 போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் நீடிக்கிறது. இந்நிலையில் தொடரை முடிவுசெய்யும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியுள்ளது.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, விக்கெட்டையே இழக்காமல் ஆஸ்திரேலியா பவுலிங்கை சிதறடித்தது. தொடக்க வீரர்களான மார்க்ரம் மற்றும் அக்கர்மேன் இருவரும் சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்தி மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசல்வுட் மூன்றுபேரையும் வெளுத்துவாங்கினர்.

அக்கர்மேன்
அக்கர்மேன்proteas men

முதல் செஸ்ஸன் முடிவில் 148 ரன்னுக்கு 0 என இருந்த தென்னாப்பிரிக்கா வலுவான தொடக்கத்தை பெற்றது. சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட அக்கர்மேன், நாதன் லயனை இறங்கிவந்து அடிக்க முயன்று ஸ்டம்ப் அவுட்டாகி வெளியேறினார். விக்கெட் வீழ்த்த ஆஸ்திரேலியா திணறிக்கொண்டிருக்கும் போது இப்படி அவுட்டானது தான் தென்னாப்பிரிக்காவின் முதல் சறுக்கலாக அமைந்தது.

ஆனால் அதற்குபிறகும் பெடிங்காம் மற்றும் மார்க்ரம் ஜோடி சிறப்பாகவே விளையாடியது. 203 ரன்னுக்கு 1 விக்கெட் என வலுவான நிலையில் இருந்த தென்னாப்பிரிக்காவை அடுத்த 126 ரன்களுக்கு சுருட்டி எறிந்தார் மிட்செல் ஸ்டார்க். முதல் செஸ்ஸனில் ஹாட்ரிக் பவுண்டரியை விட்டுக்கொடுத்து சுமாராக தொடங்கிய ஸ்டார்க், 3வது செஸ்ஸனில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 329 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்கா அணியில் டாப் 3 வீரர்களுக்கு பிறகு அனைவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

மிட்செல் ஸ்டார்க் தன்னுடைய கடைசி 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை முடித்துவைத்தார்.

3வது டெஸ்ட் போட்டி ஆரம்பமே விறுவிறுப்பாக மாறியுள்ளது.

mitchell starc picks 4 wickets in 6 balls against south africa
முதல் நாளில் 0 விக்கெட்.. 148 ரன்கள்! ஆஸ்திரேலியாவை சுத்தலில் விட்ட தென்னாப்பிரிக்கா!
mitchell starc picks 4 wickets in 6 balls against south africa
5 ஓவரில் 100 ரன்கள்.. 2 உலகசாதனை படைத்த அபிஷேக்-சூர்யவன்ஷி ஜோடி!
mitchell starc picks 4 wickets in 6 balls against south africa
35 பந்தில் சதமடித்த அபிஷேக் சர்மா.. 12 பந்தில் ஏன் அடிக்கல? யுவராஜ் சிங் பதிவு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com