\
michael hussey rejects england test role
Michael HusseyPTI

தேடி வந்த பதவி.. ஒற்றை வார்த்தையில் முடித்த CSK ரத்தம்.. நிராகரிக்க என்ன காரணம்?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை நிராகரித்துள்ளார்.
Published on

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாக இருந்து வந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃபிளமிங், சமீபத்தில் அதிலிருந்து விலகினார். பின்னர், இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹசி், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியை ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீபன் பிளெமிங், தம்முடன் பணிபுரிய மைக் ஹசிக்கு அழைப்பு விடுத்தார்.

Michael Hussey
Michael HusseyPTI

ஆனால், முழு நேர பன்னாட்டுப் பயணங்கள் மற்றும் கடினமான அட்டவணை காரணமாக ஹசி இந்த வாய்ப்பை நிராகரித்தாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பகுதிநேர ஆலோசகர் பொறுப்பைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளார். இந்த பகுதிநேரப் பொறுப்பு, 'தி ஹண்ட்ரட்' மற்றும் பிற டி20 லீக் தொடர்களில் பயிற்சியாளராக செயல்படவும், ஆஸ்திரேலியாவின் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக தொடரவும் அவருக்கு கூடுதல் வாய்ப்பை வழங்கும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதேநேரத்தில், ஹசியின் நிராகரிப்பைத் தொடர்ந்து, தற்போது தற்காலிக பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் மார்கஸ் டிரெஸ்கோத்திக்கை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிரந்தரப் பயிற்சியாளராகத் தக்கவைக்க பரிசீலித்து வருகிறது.

michael hussey rejects england test role
தோனிக்கு அந்த தகுதி இருக்கிறது: ஹசி
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com