திலக வர்மாவை திட்டித் தீர்த்த ஹர்திக் பாண்டியா.. சதமடித்து அசத்தல்.. மும்பை வெற்றி!
திலக் வர்மா ஆரம்பத்தில் ரன் எடுக்க சிரமப்பட்டபோது, அவருடன் களத்தில் நின்ற ஹர்திக் பாண்டியா அவரைக் கடுமையாகத் திட்டினார். அவருடைய இந்தச் செயல், ரசிகர்களிடமும் அணியினரிடமும் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், அவர் திட்டியதற்குப் பிறகே திலக் வர்மாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆம், அதற்குப் பின் அதிரடியாக ஆடி சதமடித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி, நான்கு தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தது. இப்பரிதாபமான கட்டத்தில், மும்பை அணி, குஜராத் அணியை எதிர்கொண்ட நிலையில், அதை வீழ்த்தி வெற்றிபெற்றது. திலக் வர்மாவின் அதிரடி ஆட்டமே இந்த வெற்றியின் திருப்புமுனையாக அமைந்தது. அவர், 45 பந்துகளில் 101* ரன்களைக் குவித்து அசத்தினார். இதில் எட்டு பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் அடங்கும். இது திலக்கிற்கு ஐபிஎல்லில் முதல் சதம் ஆகும். முன்னதாக, அவர் தாம் சந்தித்த முதல் 20 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்த 23 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார்.
இதற்குக் காரணம், கேப்டன் ஹர்திக் பாண்டியாதான். திலக் வர்மா ஆரம்பத்தில் ரன் எடுக்க சிரமப்பட்டபோது, அவருடன் களத்தில் நின்ற ஹர்திக் பாண்டியா அவரைக் கடுமையாகத் திட்டினார். அவருடைய இந்தச் செயல், ரசிகர்களிடமும் அணியினரிடமும் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், அவர் திட்டியதற்குப் பிறகே திலக் வர்மாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆம், அதற்குப் பின் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவரது ஆட்டத்தால் மும்பை அணி, கடைசி நான்கு ஓவர்களில் 73 ரன்களைக் குவிக்க, குஜராத்துக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அதிவேக சதமடித்த வீரர்களின் பட்டியலில் சனத் ஜெயசூர்யாவுடன் இடத்தைப் பகிர்ந்துகொண்டார். இருவரும் 45 பந்துகளில் சதமடித்து உள்ளனர்.
இந்த நிலையில், களத்தில் திலக் வர்மாவைத் திட்டியது குறித்து ஹர்திக் பாண்டியா, “அவனிடம் (திலக்) அபாரத் திறமையுள்ளது, எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. பந்தைப் பார்த்து, எப்படி வந்தாலும் அடி என்றே அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவனது பேட்டிலிருந்து பந்து செல்லும்விதம் உண்மையிலேயே சிறப்பு. அவன் சிறப்பாக ஆட இதுவே சரியான நேரம். நான் சத்தமாகக் கத்தியபோது தலைசுற்றுவதுபோலவே இருந்தது. இந்த வெற்றி அணிக்கும், திலக்கிற்கும் மிகத் தேவையானது. ஒரு கேப்டனாக, நிலைமையை மாற்றுவதற்கு இந்த ஆற்றல் மிகவும் அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
சதமடித்தது குறித்து திலக் வர்மா, “கடந்த ஐந்து ஆட்டங்களில் நான் களத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. அதனால், இந்தப் போட்டியில் களத்தின் மையப்பகுதியில் முடிந்தளவு நேரம் செலவிட விரும்பினேன். நான் சூழ்நிலையைக் கூர்ந்து கவனித்தேன், அணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்தேன். அந்த நேரத்தில், நிலைத்து நின்று ஆடி, எனது அடிப்படைகளைப் பின்பற்றினேன். அழுத்தத்தின்கீழ் விளையாடுகையில், உங்கள் திறனை நம்புவது அவசியம். நான் அதைத்தான் செய்தேன், அது நல்ல விளைவுகளைத் தந்துள்ளது. ஹர்த்திற்குத்தான் இந்தப் பெருமை சேரும்”என்றார்.

