அன்று கபில்தேவ் இன்று மேக்ஸ்வெல்... தனியொருவனாய் ஜெயித்துக்காட்டிய சூப்பர் ஹீரோஸ்!

ஜிம்பாவே அணிக்கு எதிரான கபில்தேவ் ஆட்டத்தை நினைவுபடுத்திய மேக்ஸ்வெல்லின் ஆட்டம்!
கபில்தேவ் - மேக்ஸ்வெல்
கபில்தேவ் - மேக்ஸ்வெல்File image

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை குவித்தது. அந்த அணியின் பேட்டர் இப்ராஹிம் ஜத்ரான் 143 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்சர் உட்பட 129 ரன்களை அடித்தார்.

Ibrahim
Ibrahimpt desk

எளிதாக வென்றுவிடும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகி வெளியேற மிட்செல் மார்ஸ், வார்னர், ஜோஸ் இங்க்லீஸ் ஆகியோர் சொற்ப ரன்களிலேயே வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 4 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா அணி மேலும் 42 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து 7 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாப நிலையில் இருந்தது.

சரி... ஆப்கானிஸ்தான் அணியின் பக்கம்தான் வெற்றியென ரசிகர்கள் டிவியை நிறுத்திவிட்டு சென்ற நிலையில், போயாட்டம் ஆடி வெற்றியை தனது அணியின் பக்கம் திருப்பினார் மேக்ஸ்வெல். ஒருபுறம் கேப்டன் பேட் கம்மின்ஸ் நங்கூரமிட்டு விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்து நிற்க, மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களை சிக்சர்களுக்கு பறக்கவிட்டார். தொடர்ந்து விக்கெட்டை விடாமல் விளையாடிய இந்த ஜோடி 150 ரன்கள் கடந்து பார்ட்னர்ஷிப் போட்டு ஆப்கானிஸ்தானை கலங்கடித்தனர். ஒருபுறம் வலியால் துடித்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய மேக்ஸ்வெல், சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார்.

கபில்தேவ் - மேக்ஸ்வெல்
201*.. உயிரை கொடுத்து களத்தில் போராட்டம்! வலியோடு வரலாறு படைத்த மேக்ஸ்வெல்! ஆஸி. த்ரில் வெற்றி!
maxwell
maxwellpt desk

வலியால் துடித்த மேக்ஸ்வெல் எப்படியும் மைதானத்திலிருந்து வெளியேறி விடுவார், ஆஸ்திரேலியா தோற்றுவிடும் என நினைத்த போது, அணிக்காக தொடர்ந்து விளையாட தீர்மானித்த மேக்ஸ்வெல், தனது அணியின் வெற்றிக்காக உயிரை கொடுத்து களத்தில் போராடினார். வலியை பொறுத்துக் கொண்டு கடைசிவரை அதிரடிகாட்டிய மேக்ஸ்வெல் 21 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் உட்பட 201 ரன்களை குவித்த தனியொரு ஆளாக நின்று ஆஸ்திரேலியா அணிக்கு நம்பமுடியாத வெற்றியை தேடித்தந்ததோடு தனது அணியை அரையிறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

கபில்தேவ் - மேக்ஸ்வெல்
ஆஸி உடனான தோல்விக்கு பிறகும் ஆப்கானுக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கா? அதுக்கு இப்படி நடக்கணும்!

தனியொரு வீரனாக நின்று ஆஸ்திரேலியா அணியை வெற்றிபெற வைத்த மேக்ஸ்வெல்லை பார்க்கையில், முன்னாள் இந்திய வீரர் கபில்தேவ் ஜிம்பாவே அணிக்கு எதிராக தனி ஆளாக நின்று ரன் அடிக்க போராடியதுதான் நினைவிற்கு வருகிறது. ஆம் 1983ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஜிம்பாவே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் இந்திய அணி வெறும் 15 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. இந்நிலையில் களமிறங்கிய இந்திய வேகப்பந்து ஆல்ரவுண்டர் கபில்தேவ் 175 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

(இந்த காட்சி, 1983 திரைப்படத்திலும் காட்டப்பட்டிருந்தது. அது இங்கே..)

அதேபோல் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. இந்நிலையில், களமிறங்கிய மேக்ஸ்வெல் 128 பந்துகளை சந்தித்து 21 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்கள் உட்பட 201 ரன்களை குவித்து, ஆஸ்திரேலிய அணியை வெற்றிபெறச் செய்துள்ளார்.

maxwell
maxwellpt desk

கபில்தேவுக்கு வலி இல்லை. அதனால் வெற்றிக்கான வழியை உருவாக்கினார். ஆனால் மேக்ஸ்வெல் வலியோடு தனது மன வலிமையால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் நுழைய வழிகாட்டினார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடந்து போட்டிகளிலேயே இதுதான் மிக மிக சிறந்த போட்டி என்றால் அது மிகையில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com