ப்ரைம் ஃபார்மில் ஜொலிக்கும் குல்தீப் யாதவ்! ஒரே போட்டியில் அடுத்தடுத்து சாதனை படைத்து அசத்தல்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் ஜொலித்து வரும் குல்தீப் யாதவ் பல சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
Kuldeep Yadav
Kuldeep YadavTwitter

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடிவருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பவல், அல்சாரி ஜோசப் போன்ற வீரர்கள் கம்பேக்கினால் டி20 தொடரில் அசத்திவருகிறது.

WI vs IND
WI vs INDFIle images

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் 4 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற விண்டீஸ் அணி 2-0 என முன்னிலை பெற்றது. இன்னும் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்ற நிலையில், இந்திய அணியை மூன்றாவது போட்டியில் எதிர்கொண்டு நேற்று விளையாடியது. முக்கியமான போட்டியில் கம்பேக் கொடுத்த குல்தீப் யாதவ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

Kuldeep Yadav
WIvsIND | மீண்டும் சொதப்பியது இந்தியா; மீண்டும் கேள்விக்குள்ளாகவும் இந்திய அணியின் செலக்ஷன்!

அதிவேகமாக 50 டி20 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர்!

இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட சிறு காயத்தில் அதில் பங்கேற்காமல் இருந்த குல்தீப் யாதவ் 3வது போட்டிக்கு திரும்பினார். முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் வீரர்கள் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.

கைல் மேயர்ஸை அக்சர் பட்டேல் 25 ரன்களில் வெளியேற்ற, அதற்கு பிறகு குல்தீப் யாதவ் ஆதிக்கம் செலுத்தினார். அபாரமாக பந்துவீசிய குல்தீப் பிரண்டன் கிங், சார்லஸ், நிக்கோலஸ் பூரன் என மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி விண்டீஸ் அணியை பேக்ஃபுட்டில் போட்டார். 4 ஓவரில் 28 ரன்களை விட்டுக்கொடுத்த குல்தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முடிவில் 159 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் 84 ரன்கள் அடித்து அசத்தினார்.

இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ், சர்வதேச டி20 போட்டிகளில் 50 டி20 விக்கெட்டுகளை வேகமாக எட்டிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் 34 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த யுஸ்வேந்திர சாஹலை பின்னுக்கு தள்ளிய குல்தீப், 30 போட்டிகளில் இதை செய்து சாதனை படைத்துள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில் 41 போட்டிகளில் பும்ராவும், 42 போட்டிகளில் அஸ்வினும் இருக்கின்றனர். உலக கிரிக்கெட்டர்கள் வரிசையில் இம்ரான் தாஹிர் மற்றும் ரசீத் கானை பின்னுக்கு தள்ளியிருக்கும் குல்தீப், 50 டி20 விக்கெட்டுகளை வேகமாக கைப்பற்றிய இரண்டாவது சர்வதேச பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். ரசீத் கான் மற்றும் இம்ரான் தாஹிர் இருவரும் 31 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர். முதல் இடத்தில் 26 போட்டிகளுடன் இலங்கை பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் நீடிக்கிறார்.

விண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் பெற்று சாதனை!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை மட்டுமல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் புவனேஷ் குமார் 18 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், வெறும் 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி புது சாதனையை படைத்துள்ளார் குல்தீப்.

bhuvneshwar kumar
bhuvneshwar kumar

இந்த பட்டியலில் புவனேஷ் குமார் 18 போட்டிகளில் 13 விக்கெட்டுகள், மெக்காய் 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகள், ரவி பிஸ்னோய் 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் மற்றும் ரவிந்தீர ஜடேஜா 12 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com