இந்தியா - ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியாweb

IND vs AUS| களமிறங்கிய குல்தீப் யாதவ்.. 3வது போட்டியில் வெல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது..
Published on
Summary

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது..

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், சூர்யகுமார் யாதவ் தலைமையில் 5 டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது.

ஒருநாள் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பெர்த் மற்றும் அடிலெய்டு மைதனாங்களில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா..

ind vs aus odi series
ind vs aus odi series

குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா போன்ற பவுலர்கள் இடம்பெறாததே தோல்விக்கு காரணமாக கூறப்படும் நிலையில், இன்றைய போட்டியில் இடம்பெறுவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது..

இந்தசூழலில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் கடைசி போட்டியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா
"ஆட்டநாயகன் விருதை வெல்வார் என நினைத்தேன்.." - ஹர்சித் ராணாவுக்கு ஆதரவாக சீக்கா சொன்ன வார்த்தை!

குல்தீப் யாதவிற்கு இடம்..

சிட்னியில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வுசெய்தார்.. இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக அர்ஸ்தீப் சிங்குக்கு பதில் குல்தீப் யாதவும், நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் இடம்பெற்றுள்ளனர்..

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிweb

3வது ODI இந்திய அணி:

ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ( துணை கேப்டன் ), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் பட்டேல், ஹர்சித் ராணா, வாசிங்டன் சுந்தர், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா

இந்தியா - ஆஸ்திரேலியா
"இந்தியாவின் தரமான புராடக்ட் அக்சர் பட்டேல்.." - அஸ்வின் புகழாரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com