ஐபிஎல் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா அணி!

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஹைதராபாத் அணி - கொல்கத்தா அணி
ஹைதராபாத் அணி - கொல்கத்தா அணிமுகநூல்

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஹைதராபாத் அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட், டக் ஆவுட் ஆகி வெளியேற அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. திரிபாதி மட்டும் அரைசதம் அடித்த நிலையில், 19.3 ஓவர்களில் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா அணியின் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர். எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள், ஹைதராபாத் பந்துவீச்சை பறக்கவிட்டனர்.

ஹைதராபாத் அணி - கொல்கத்தா அணி
RCB vs RR Eliminator - இரு அணிகளுக்கும் நடந்த தலைகீழ் மாற்றங்கள்... என்னதான் ஆகப்போகிறது போட்டியில்?

வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயஸ் அய்யர் இருவரும் அதிரடியாக அரைசதம் அடித்ததால் 13.4 ஓவர்களிலேயே அந்த அணி வெற்றிபெற்றது. இதன்மூலம், இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா முன்னேறியுள்ளது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com