உலகக்கோப்பையில் முதல்முறையாக 0 ரன்னில் அவுட்டான கோலி! இந்த சாதனையிலும் சச்சினை சமன் செய்த விராட்?

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 9 பந்துகளை சந்தித்து 0 ரன்னில் வெளியேறினார் விராட் கோலி.
கோலி - சச்சின்
கோலி - சச்சின்டிவிட்டர்
Published on

நடப்பு உலகக்கோப்பையில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணியும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும் லக்னோ ஆடுகளத்தில் இன்று பலப்பரீட்சை நடத்திவருகின்றன. மந்தமான திரும்பும் பிட்ச்சான லக்னோவில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

5 போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங் மட்டுமே செய்து வெற்றிபெற்றுள்ள இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இதற்கு முன் முதல் பேட்டிங் செய்து வெற்றிபெற்றுவந்த தென்னாப்பிரிக்க அணி சேஸிங்கில் சொதப்பியது. ஒருவேளை இந்தியாவும் அப்படி சொதப்புமா இல்லை சிறப்பாக செயல்படுமா என தொடங்கப்பட்ட போட்டியில், இங்கிலாந்து பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

முதல்முறையாக 0 ரன்னில் வெளியேறிய கோலி!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்கத்திலேயே சுப்மன் கில்லை 9 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றி இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்தர் க்றிஸ் வோக்ஸ். அதற்கு பிறகு களமிறங்கிய விராட் கோலிக்கு அடுத்தடுத்து டாட் பாலாக வீசி அழுத்தம் கூட்டிய டேவிட் வில்லி, 9 பந்துகளை சந்தித்திருந்த கோலியை 0 ரன்னில் வெளியேற்றி அசத்தினார். இதன்மூலம் இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் டக் அவுட்டாகாத விராட் கோலி, முதல்முறையாக இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

விராட் கோலி
விராட் கோலி

அதற்கு பிறகு நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்களும், சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 39 ரன்களும், இறுதியில் வந்து பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் 49 ரன்களும் அடிக்க 50 ஓவர் முடிவில் 229 ரன்கள் மட்டுமே இந்திய அணி பதிவு செய்தது.

சச்சினின் மோசமான சாதனை சமன்செய்த கோலி!

இந்த போட்டியில் 0 ரன்னில் வெளியேறியதன் மூலம், அனைத்து சர்வதேச கிரிக்கெட் வடிவத்திலும் 34 முறை டக் அவுட்டை பதிவுசெய்துள்ளார் விராட்கோலி. இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கரும் 34 முறை டக் அவுட்டில் வெளியேறி இருந்த நிலையில், தற்போது சச்சினின் இந்த ரெக்கார்டையும் சமன்செய்துள்ளார் விராட் கோலி.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

இந்த பட்டியலில் இருக்கும் இந்திய வீரர்களில் ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இருப்பது சச்சின் மற்றும் கோலி இருவர் மட்டும் தான். இந்த வரிசையில் ஜாகீர் கான் (43 டக் அவுட்), இஷாந்த் ஷர்மா (40), ஹர்பஜன் சிங் (37), அனில் கும்ப்ளே (35) என முதல் 4 இடங்களில் இருக்கும் இந்திய பவுலர்களுக்கு பிறகு 5வது இடத்தில் சச்சின் மற்றும் கோலி இருவரும் 34முறை டக் அவுட்டை பதிவுசெய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com