'Klassy Rahul..' முதல் இந்திய வீரராக SENA நாடுகளில் கேஎல் ராகுல் படைத்த பிரமாண்ட சாதனை!
கேஎல் ராகுல் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரராக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 126 ரன்களுடன் விளையாடி வருகிறார். இதற்கு முன்பு சச்சின், கோலி உள்ளிட்ட வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிக்கோல்ஸின் அட்டகாசமான 175* ரன்கள் ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 368 ரன்கள் அடித்துள்ளது.
நியூசிலாந்தைத் தொடர்ந்து விளையாடிவரும் இந்திய அணி 356/2 ரன்களுடன் விளையாடி வருகிறது. கேஎல் ராகுல் தன்னுடைய 13வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து 126 ரன்களுடன் விளையாடிவருகிறது. ஜெய்ஸ்வால் 85 ரன்கள், படிக்கல் 80 ரன்கள் அடித்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தனர்.
இந்நிலையில் இந்தப்போட்டியில் சதமடித்ததன் மூலம், SENA நாடுகள் என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளிலும் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரராக கேஎல் ராகுல் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு முகமது அசாரூதின், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகிய இந்திய வீரர்கள் செனா நாடுகள் அனைத்திலும் சதமடித்துள்ளனர்.

