நியூசிலாந்து டெஸ்ட்டில் சதமடித்த கேஎல் ராகுல்.. 23 ஆண்டுக்கு பிறகு SENA-ல் இந்தியா சாதனை!
நியூசிலாந்து டெஸ்ட்டில் இந்தியா வலுவான தொடக்கம்; கேஎல் ராகுல் சதமடித்து அசத்திய நிலையில், 317/2 என முன்னிலையில் உள்ளது. தொடக்க ஜோடிகள் மற்றும் படிக்கல் பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணி 23 ஆண்டுகளுக்கு பிறகு SENA நாடுகளில் புதிய சாதனை படைத்துள்ளது.
WTC பட்டியலில் நியூசிலாந்து அணி 2வது இடத்திலும், இந்தியா 4வது இடத்திலும் நீடிப்பதால், இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் எண்ணத்தில் களம்கண்டுள்ளது இந்திய அணி.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கிய நிலையில், இந்திய அணி முதலில் பந்துவீசியது. பும்ராவின் மிரட்டலான பந்துவீச்சால் 70 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து அணி. ஆனால் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிக்கோல்ஸ் மற்றும் க்ளென் பிலிப்ஸ் கூட்டணி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தது. க்ளென் பிலிப்ஸ் 118 ரன்கள், நிக்கோல்ஸ் 175* ரன்கள் என அடிக்க முதல் இன்னிங்ஸில் 368 ரன்களை சேர்த்தது நியூசிலாந்து.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் இந்திய அணியில், தொடக்க ஜோடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் முதல் விக்கெட்டுக்கே 130 ரன்கள் சேர்த்து அற்புதமாக தொடங்கினர். சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துக்கைக்கோர்த்த படிக்கல் மற்றும் கேஎல் ராகுல் ஜோடியும் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தியது.
80 அடித்திருந்தபோது படிக்கால் அவுட்டாகி வெளியேறிய நிலையில், கேஎல் ராகுல் 13வது டெஸ்ட் சதமடித்து அசத்தினார். சமீபத்திய அப்டேட்டின் படி 317 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது இந்தியா. ராகுல் 118 ரன்களுடனும், கேப்டன் கில் 16 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
23 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை!
SENA நாடுகளில் இந்திய அணி 23 ஆண்டுகளுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளுக்கு 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தியுள்ளது. இதற்கு முன்பு 1979, 1986ஆம் ஆண்டுகள் சுனில் கவாஸ்கர், வெங்சர்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சௌஹான் போன்றவர்கள் அடித்திருந்த நிலையில், 2003ஆம் ஆண்டு சேவாக், சோப்ரா, ராகுல் டிராவிட் அடித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் 3 பேரும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

