kane williamson
kane williamsoncricinfo

9000 டெஸ்ட் ரன்கள்.. முதல் நியூசிலாந்து வீரராக கேன் வில்லியம்சன் படைத்த சாதனை!

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நியூசிலாந்து வீரராக புதிய சாதனை படைத்துள்ளார்.
Published on

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் ஆடுகளத்தில் தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் 93 ரன்கள் ஆட்டத்தால் 348 ரன்கள் சேர்த்தது.

harry brook
harry brook

அதன்பிறகு தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி ஒல்லி போப் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரின் அரைசதம் மற்றும் ஹாரி ப்ரூக்கின் 171 ரன்கள் ஆட்டத்தால் 499 ரன்கள் குவித்தது.

151 ரன்கள் பின்தங்கிய நிலையில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

kane williamson
’மிகக்குறைந்த பந்துகளில் முடிந்த இன்னிங்ஸ்..’ - 100 ஆண்டில் இல்லாத மோசமான சாதனை படைத்த இலங்கை!

முதல் நியூசிலாந்து வீரராக கேன் வில்லியம்சன் படைத்த சாதனை..

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 93 ரன்கள் அடித்த கேன் வில்லியம்சன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், 61 ரன்கள் அடித்து வெளியேறினார்.

kane williamson
kane williamson

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

kane williamson
42 ரன்னுக்கு All Out..! RCB ரெக்கார்டை உடைத்தது இலங்கை அணி.. WTC ஃபைனல் கனவு காலி! SA அபாரம்!

அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர்கள்..

1. கேன் வில்லியம்சன் - 103 போட்டிகள் - 9035 ரன்கள்*

2. ராஸ் டெய்லர் - 112 போட்டிகள் - 7683 ரன்கள்

3. ஸ்டீஃபன் ஃபிளெமிங் - 111 போட்டிகள் - 7172 ரன்கள்

4. பிரெண்டன் மெக்கல்லம் - 101 போட்டிகள் - 6453 ரன்கள்

5. டாம் லாதம் - 86 போட்டிகள் - 5711 ரன்கள்*

kane williamson
”உங்களுக்கு பெர்த்தில் நல்ல நேரம்;ஆனால்..”-ஆஸ்திரேலியா பிரதமர் கருத்துக்கு கோலியின் பதிலை பாருங்கள்!

குறைவான போட்டிகளில் 9000 டெஸ்ட் ரன்கள்:

1. ஸ்டீவ் ஸ்மித் - 99 போட்டிகள்

2. பிரையன் லாரா - 101 போட்டிகள்

3. குமார் சங்ககரா, யூனிஸ் கான், கேன் வில்லியம்சன்* - 103 போட்டிகள்

kane williamson
1 பந்தில் Miss-ஆன உலக சாதனை... IPL ஏலத்தில் UNSOLD-ஆன குஜராத் வீரர், 28 பந்துகளில் சதமடித்து வரலாறு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com