சஜீவன் சஜனா
சஜீவன் சஜனாcricinfo

”கேரளா வெள்ளத்தில் அனைத்தையும் இழந்தார்”! கடைசி பந்தில் சிக்சர் அடித்த சஜனா! பாராட்டிய ஜெமிமா!

2024 மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே கடைசி 1 பந்தில் சிக்சர் அடித்து ஹீரோவாக உருவெடுத்துள்ளார் சஜீவன் சஜனா.

2024 மகளிர் ஐபிஎல் தொடரானது நேற்று பாலிவுட் நட்சத்திரங்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று கோலகாலமாக தொடங்கியது. பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் 17-ம் தேதிவரை நடைபெறவிருக்கும் மிகப்பெரிய தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

கடந்த 2022 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியாளர்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் மோதலில் யார் வெற்றியுடன் தொடங்கப்போகிறார் என்ற பலத்த எதிர்பார்ப்புடன் முதல் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நடப்பு சாமியன் அணியான மும்பை இந்தியன்ஸ், முதலில் பவுலிங்கை தேர்வுசெய்தது.

jemimah
jemimah

முதலில் பேட்டிங் விளையாடிய டெல்லி அணியில், ப்ரைம் ஃபார்மில் இருக்கும் ரோட்ரிக்ஸ் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 24 பந்தில் 42 ரன்கள் எடுக்க, மறுபக்கம் 53 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களை விளாசி 75 ரன்களை அலைஸ் காப்ஸேவும் அடிக்க, 20 ஓவர் முடிவில் 171 ரன்களை குவித்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

சஜீவன் சஜனா
கடினமான நேரத்தில் அஸ்வினுக்காக வாடகை விமானத்தை ஏற்பாடு செய்த பிசிசிஐ! ரவி சாஸ்திரி பாராட்டு!

கடைசி 1 பந்துக்கு 5 ரன் தேவை! சிக்சரடித்து முடித்த கேரளா வீராங்கனை!

172 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, தொடக்க வீரர் ஹேலே மேத்யூஸை 0 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் மரிசான் கேப்.

முதல் விக்கெட்டை 0 ரன்னிலேயே இழந்தாலும் விக்கெட் கீப்பர் யாஸ்டிகா பாட்டியா அதிரடியான பேட்டிங்கால் மிரட்டிவிட்டார். 6 ஓவருக்கே 50 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எட்டினாலும், மறுமுனையில் இருந்த ப்ரண்ட்டை 19 ரன்னில் வெளியேற்றி இழுத்து பிடித்தார் அருந்ததி ரெட்டி.

yastika
yastika

ஆனால் கைக்கோர்த்த யஸ்டிகா மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கார் இருவரும் போட்டியை விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். யஸ்டிகா அரைசதம் அடித்து வெளியேற, அடுத்து களமிறங்கிய அமிலியா கெர்ரையும் 24 ரன்னில் போல்டாக்கி அனுப்பிவைத்தார் ஷிகா. கடைசி 7 பந்துக்கு 18 ரன்கள் என போட்டி மாற களத்திலிருந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19வது ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க இறுதி 6 பந்துகளுக்கு 12 ரன்கள் என போட்டி மாறியது.

harmanpreet
harmanpreet

கடைசி ஓவரின் முதல் பந்தில் விக்கெட், இரண்டாவது பந்தில் 2 ரன்கள், மூன்றாவது பந்தில் 1 ரன் என போட்டி சென்று, கடைசி 3 பந்துகளுக்கு 9 ரன்கள் என்ற இடத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத்துக்கு ஸ்டிரைக் சென்றது. 4வது பவுண்டரியை பறக்கவிட்ட ஹர்மன்ப்ரீத் நம்பிக்கையளிக்க, அடுத்த பந்திலேயே அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சிகொடுத்தார். கடைசி 1 பந்துக்கு 5 ரன்கள் தேவை என்ற கடினமான நேரத்தில் இறுதிபந்தை சந்திக்க தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார் கேரளாவை சேர்ந்த சஜீவன் சஜனா.

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பிய சஜனா, த்ரில்லர் போட்டியை கடைசியில் மும்பை அணிக்கு முடித்துவைத்து ஹீரோவாக மாறினார்.

சஜீவன் சஜனா
“MS தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தோம்” குற்றச்சாட்டு வைத்த முன்னாள் வீரர்கள்..10 பேரின் கதை!

தோற்றாலும் சஜனாவை பாராட்டிய ஜெமிமா!

என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கடைசி பந்தில் தோற்றாலும், சஜீவன் சஜானவின் அற்புதமான பேட்டிங்கை பாராட்டி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் ஜெமிமா ரோட்ரிக்ஸ்.

sajana
sajana

சஜனா குறித்து பதிவிட்டிருக்கும் அவர், “நாம் நினைத்தது போல போட்டியின் முடிவு இருக்கவில்லை, ஆனால் சஜானாவின் என்னவொரு அற்புதமான ஃபினிசிங் இது!.

ஒரு பொருளாதாராத்தில் பின்தங்கிய நிலையிலிருந்து வந்து, கிட்டத்தட்ட கேரளா வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து, அணிக்கு 1 பந்துக்கு 5 ரன்கள் தேவைப்படும்போது, ​​ஒரு சிக்ஸரை அடித்தார். என்ன ஒரு ஸ்டோரி! என்ன ஒரு வீரர்!” என புகழ்ந்துள்ளார்.

கேரளா வயநாடு பகுதியைச் சேர்ந்த 28 வயது வீராங்கனையான சஜீவன் சஜனா கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளானவர். இவர் கனா எனும் தமிழ்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சஜீவன் சஜனா
”பாதிக்கப்பட்ட உங்களுக்கு தெரியாதா”! தோனியை புகழ்ந்த முன். PAK வீரர்! டைமிங்கில் கலாய்த்த நெறியாளர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com