3 போட்டியில் 22 விக்கெட்டுகள்.. ஐசிசி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக பும்ரா தேர்வு!
2024 டிசம்பரில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விதிவிலக்கான டெஸ்ட் தொடரை கொண்டிருந்தார். இதுபோலான ஒரு பந்துவீச்சை இதற்கு முன்பு பார்க்கவில்லை என ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த பல முன்னாள் ஜாம்பவான்கள் பிரமித்திருந்தனர்.
பும்ராவின் அசாத்தியமான பந்துவீச்சானது அவருக்கு ஐசிசியின் சிறந்த ஆண்களுக்கான வீரர் விருதைப் பெற்றுத் தந்துள்ளது, டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த விருதை பாட் கம்மின்ஸ் மற்றும் டேன் பேட்டர்சன் ஆகியோருடன் போட்டிப்போட்ட பிறகு பும்ரா தட்டிப்பறித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில், பும்ரா 14.22 என்ற வியக்கத்தக்க பந்துவீச்சு சராசரியுடன் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இந்தியாவை தனியொரு ஆளாக தாங்கிப்பிடித்த பும்ரா இந்த தொடரின் முடிவில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பெண்களுக்கான டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலியாவின் சதர்லேண்ட் வென்றுள்ளார்.
ICC மாத சிறந்த விருதுகளை வென்ற இந்தியர்கள்..
1. ரிஷப் பண்ட் - ஜனவரி 2021 - Player of the Month
2. ரவிச்சந்திரன் அஸ்வின் - பிப்ரவரி 2021 - Player of the Month
3. புவனேஷ்வர் குமார் - மார்ச் 2021 - Player of the Month
4. ஸ்ரேயாஸ் ஐயர் - பிப்ரவரி 2022 - Player of the Month
5. விராட் கோலி - அக்டோபர் 2022 - Player of the Month
6. சுப்மன் கில் - ஜனவரி, செப்டம்பர் 2023 - Player of the Month
7. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - பிப்ரவரி 2024 - Player of the Month
8. ஜஸ்பிரித் பும்ரா - ஜூன், டிசம்பர் 2024 - Player of the Month
இதுவரை ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுப்மன் கில் இரண்டு பேர் மட்டுமே இந்திய வீரர்களில் இரண்டுமுறை ஐசிசியின் மாத சிறந்த வீரருக்கான் விருதுகளை வென்றுள்ளனர்.