ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி 2025| 8 நாடுகளின் அணிகள் மற்றும் வீரர்கள் விவரம்!
ஐசிசியின் அடுத்த மிகப்பெரிய கோப்பையாக பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது இந்தாண்டு நடக்கவிருக்கிறது. 2023 ஒருநாள் கோப்பையை இறுதிப்போட்டிவரை சென்று கோட்டைவிட்ட இந்திய அணி, 2025 சாம்பியன்ஸ் டிரோபியை குறிவைத்துள்ளது.
ஹைப்ரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படவிருக்கும் இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படவிருக்கும் நிலையில், குரூப் ஏ-ல் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் முதலிய அணிகளும், குரூப் பி-ல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
சாம்பியன்ஸ் டிரோபி தொடரின் முதல் ஆட்டம் பிப்ரவரி 19 அன்று பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்குகிறது. இந்த சூழலில் அனைத்து அணிகளும் அவர்களுடைய அணியையும், உத்தேச அணியையும் அறிவித்து வருகின்றன.
மொத்த 8 அணிகளின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
குரூப் பி
தென்னாப்பிரிக்கா:
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஷி, மார்கோ யான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நார்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன்,டப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்.
முக்கிய அப்டேட்:
அன்ரிச் நோர்ஜே மற்றும் லுங்கி இங்கிடி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டோனி டி சோர்சி, ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர் முதலியோர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுசனே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.
முக்கிய அப்டேட்:
புதியதாக மேட் ஷார்ட், ஆரோன் ஹார்டி மற்றும் நாதன் எல்லீஸ் முதலிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்
அப்டேட்: காயத்தால் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை
ஆப்கானிஸ்தான்:
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (c), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், ஏ.எம். கசன்ஃபர், நூர் அஹ்மத், ஃபரூக்கி, ஃபரிட் மாலிக், நவீத் ஜத்ரான்
ரிசர்வ் வீரர்கள்: தர்வீஷ் ரசூலி, நங்யால் கரோட்டி, பிலால் சாமி
குரூப் ஏ
நியூசிலாந்து:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மன், டெவான் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்
முக்கிய அப்டேட்:
வில் ஓ'ரூர்க், பென் சியர்ஸ் மற்றும் நாதன் ஸ்மித் ஆகிய மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களுடைய முதல் சாம்பியன்ஸ் டிரோபி பதிப்பில் விளையாடவிருக்கின்றனர்.
வங்கதேசம்:
நஸ்முல் ஹொசைன் சாண்டோ (c), சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், எம்.டி. மஹ்மூத் உல்லா, ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், பர்வேஸ் நஸ்ஸாய் ஹஸ்ன், நஸும் அகமது, தன்சிம் ஹாசன் சாகிப், நஹித் ராணா
முக்கிய அப்டேட்: மூத்த வீரர்களான ஷாகிப் அல் ஹசன், தமீம் இக்பால் முதலிய வீரர்கள் இடம்பெறவில்லை
பாகிஸ்தான்:
முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், தயாப் தாஹிர், இர்பான் கான் நியாசி, சுஃப்யான் முகீம், முகமது ஹஸ்னைன், அப்துல்லா ஷபிக், நசீம் ஷா, உஸ்மான் கான், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், அப்ரார் அகமது, கம்ரான் குலாம், சல்மான் அலிஹா- உல்-ஹக், ஃபக்கர் ஜமான், ஹசிபுல்லா, அப்பாஸ் அப்ரிடி
(பாகிஸ்தான் அணி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அறிக்கைகளின் படியான அணியே குறிப்பிடப்பட்டுள்ளது)
சாம்பியன்ஸ் டிரோபிக்கான இந்திய அணி ஜனவரி 19-ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.