ரோகித், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ், ரஹானே இருந்தும் மும்பை தோல்வி! 10 ஆண்டுக்குபின் ஜம்மு-காஷ்மீர் வரலாறு!
2024-2025ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடந்துவருகின்றன. பிசிசிஐ நிர்பந்தத்தை தொடர்ந்து இந்திய அணியிலிருக்கும் அனைத்து வீரர்களும் ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவதற்காக பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் மும்பை அணியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் முதலியோரும், ரிஷப் பண்ட் டெல்லி அணியிலும், சுப்மன் கில் பஞ்சாப் அணிக்கும், ரவிந்திர ஜடேஜா சௌராஷ்டிரா அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்கியா ராஹானே, ஷிவம் துபே, ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோட்டியான் முதலியோர் அடங்கிய மும்பை அணி, ஜம்மு காஷ்மீர் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
ஜம்மு காஷ்மீர் வரலாற்று வெற்றி..
42 முறை ரஞ்சிக்கோப்பை வென்ற பலம் வாய்ந்த மும்பை அணியை எதிர்கொண்டு ஜம்மு காஷ்மீர் அணி விளையாடியது. ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்கியா ராஹானே, ஷிவம் துபே, ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோட்டியான் முதலிய பெரிய வீரர்கள் அடங்கிய மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி தர்மான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.
ஜம்மு காஷ்மீர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 120 ரன்களில் ஆல்அவுட்டானது. ஜெய்ஸ்வால் 4, ரோகித் 3, ரஹானே 12, ஸ்ரேயாஸ் 11 மற்றும் துபே 0 என சொற்ப ரன்களில் வெளியாறினார். அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் அடித்தார்.
அதனை தொடர்ந்து விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸில் 206 ரன்கள் எடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய மும்பை அணி ஷர்துல் தாக்கூரின் அசத்தலான சதம் மற்றும் தனுஷ் கோட்டியானின் அரைசதத்தின் உதவியால் 290 ரன்கள் சேர்த்தது.
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் பலம் வாய்ந்த மும்பை அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தி வரலாறு படைத்தது ஜம்மு காஷ்மீர் அணி, கடைசியாக 2014ம் ஆண்டு மும்பையை வீழ்த்தியிருந்த ஜம்மு காஷ்மீர் அணி. ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்கியா ராஹானே, ஷிவம் துபே, ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோட்டியான் முதலியோர் அடங்கிய மும்பை அணியை வீழ்த்தியிருக்கும் ஜம்மு காஷ்மீர் அணியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.